ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் திமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறுகின்றனர். ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருமான வரித்துறை சோதனை நடத்தி எங்களை மிரட்ட முடியாது என்கிறார். இதனால், திமுகவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
பொது இடத்தில் ஏடிஎம் இயந்திரம் போல் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை திமுக அரசு வைத்துள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
பழநியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா;- நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன், மருமகன் ஒரு ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்தது குறித்து கூறியுள்ளார். என்ன காரணத்துகாக ஆடியோ வெளியிட்டாரோ, அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இதற்காக பிடிஆர். பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் துறை மாற்றினாலோ அல்லது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலோ உண்மையை சொன்னதற்காகவே பதவியில் இருந்து எடுத்ததாக கருதப்படும். எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து எடுக்க கூடாது.
இதையும் படிங்க;- அண்ணாமலையை ஒருமையில் பேசுவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.! ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த அமர் பிரசாத்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவைச் சேர்ந்த 16 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து எங்கிருந்து வந்தது என்பதில் தான் ஊழல் இருக்கிறது. ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் திமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறுகின்றனர். ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருமான வரித்துறை சோதனை நடத்தி எங்களை மிரட்ட முடியாது என்கிறார். இதனால், திமுகவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 1976-ல் எப்படி நடந்ததோ அதேபோன்று இந்த முறையும் அப்படி தான் நடக்கும் என்றார்.
மேலும், பேசுகையில் பொது இடத்தில் ஏடிஎம் இயந்திரம் போல் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை திமுக அரசு வைத்துள்ளது. 34 ஆண்டுகள் மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த தமிழர்களை, 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் சாராயக் கடைகளை திறந்து விட்டு குடிமகன்களாக மாற்றியதும், தமிழர்களின் குடியைக் கெடுத்ததும் தான் திராவிட மாடல் என எச்.ராஜா கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க;- சொல்லாமல் சொல்லும் அமித்ஷா.. தமிழகத்தில் பாஜக வளர்கிறது.. அண்ணாமலையை ஆஹா ஓஹோன்னு புகழும் ஜெ. நிழல்.!