மீண்டும் உ.பியில் பாஜக ஆட்சி.. 48 சதவீதம் மக்கள் ஆதரவு.. எதிர்கட்சிகளை தெறிக்கவிட்ட யோகி..

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2021, 5:17 PM IST
Highlights

மீண்டும் தேர்தல் வந்தால் யோகி ஆதித்யநாத்திற்கே தங்கள் வாக்கு என 48 சதவீதம் பேரும், அகிலேஷ் யாதவுக்கு என 37 சதவீதம் பேரும் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. 

மீண்டும் தேர்தல் வந்தால் யோகி ஆதித்யநாத்திற்கே தங்கள் வாக்கு என 48 சதவீதம் பேரும், அகிலேஷ் யாதவுக்கு என 37 சதவீதம் பேரும் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. 

நாட்டில் மிகப்பெரிய மாநிலமாகவும், 403 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டப்பேரவையாகவும் உத்திரபிரதேசம் இருந்து வருகிறது. தற்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மே-மாதம் அங்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய கட்சிகளுக்கு உ.பி மாநில சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் 80 எம்பி இடங்கள் உள்ளன. அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கைப்பற்றும் நிலையில், அதிக  மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற முடியும் என்பதால், தேசிய காட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் உத்திரப்பிரதேச தேர்தலை குறிவைத்துள்ளன.

அதேநேரத்தில் அம்மாநிலத்தில் அதி செல்வாக்குமிக்க கட்சிகளான, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என முனைப்பு காட்டிவருகின்றன. இதனால் அங்கு பாஜக, சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி என்ற முப்பெரும் கட்சிகளுக்கும், களத்தில் அதிரடி காட்ட உள்ளன. போதாத குறைக்கு காங்கரஸ் பிரயங்கா காந்திரை களத்தில் இறக்க வியூகம் வகுத்து வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறது? என்னென்ன காரணங்களுக்காக அவருக்கு மக்கள் வாக்களிக்கக் கூடும் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாக உள்ளது. உத்திரபிரதேசம் 2022  ஜன்கி பாத் சர்வே என்ற பெயரில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் அம்மாநிலத்தின் முக்கிய பகுதிகளான கான்பூர் பண்டல்கண்ட் , அவாத், வெஸ்ட், பிரிட்ஜ், காசி, கோராக்ஸ் ஆகிய பகுதிகளில் ரேண்டம் சம்பிளிங் முறையில் சுமார் 4,200 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

 

அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகிய மூவரின் ஆட்சிகளில் யார் ஆட்சியில் ஊழல் அதிகமாக இருந்தது, சாதியின் அடிப்படையில் மக்களை ஆதரிக்கும் அரசை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்கள் வாக்கு யாருக்கு? தலைவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் நீங்கள் வாக்களிக்க முடிவு செய்வீர்களா? தேர்தலில் ராமர் கோயில் விவகாரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பன உள்ளிட்ட 14 கேள்விகள் மக்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கேள்வியாக, அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகிய மூவரில் யாருடைய ஆட்சியில் அதிக லஞ்ச லாவண்யம் தலை விரித்து ஆடியது என்ற கேள்விக்கு, 28 சதவீதம் பேர் யோகி ஆதித்யா நாத்துக்கும், 24 சதவீதம் பேர் மாயாவதி ஆட்சியில் என்றும், 47 சதவீதம் பேர் ஆகிலேஷ் யாதம் ஆட்சியில் என்றும் வாக்களித்துள்ளனர்.  

அதேபோல மக்களின் திறமையை பார்த்து அங்கீகரிக்கும் ஆட்சிக்கு வாக்களிப்பில்களா, அல்லது சாதி அடிப்படையில் முக்கியத்துவம் தரும் அரசாங்கத்தை அமைக்க விரும்புவீர்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் தகுதி அடிப்படையில் மக்களை ஆதரிக்கும் அரசையே நிறுவ விரும்புவதாக சுமார் 92 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். சாதியை மையப்படுத்தி அணுகும் அரசுக்கே தங்களின் வாக்கு என வெறும் 8%  சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் அதிக ஊழல் நிறைந்த ஆட்சி அகிலேஷ் யாதவினுடையதுதான் என மக்கள் தெரிவித்திருந்தாலும், ஊழல் ஆட்சி என இரண்டாவது இடம் யோகி ஆதித்யநாத்துக்கு கிடைத்துள்ளது. கடைசி இடத்தையே பகுஜன் சமாஜ் மாயாவதி பெற்றுள்ளார். யோகி ஆதித்யநாத் நேர்மையானவராகவும், கண்டிப்பு மிக்கவராக இருந்தாலும், ஆனால் அதிகாரிகள் ஊழல், லஞ்ச லாவண்யம் பெற்வோராக இருந்ததே இந்த சிறு பின்னடைவுக்கு காரணம், 

ஆனால் பெரும்பாலான விஷயங்களில் யோகி ஆதித்யநாத் மக்களின் செல்வாக்கு பெற்றுள்ளவராக உள்ளார், கைசுத்தமுள்ள, நேர்மையாளர் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் அவருக்குள்ளது. அதே நேரத்தில் எதிர்வரும் தேர்தலில் மோடி என்ற மாபெரும் பிம்பம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கருத்துக்கணிப்பில் உங்கள் வாக்கு யாருக்கு என கேட்கப்பட்ட கேள்விக்கு,  48 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத்கே எனவும்,  37 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவுக்கு என்றும், மற்றவர்களுக்கு என 16 சதவீதமும் பதிவாகி உள்ளது. இதனால் மீண்டும் உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராவதுடன், அங்கு மீண்டும் தாமரை மலர்வதை உறுதியாகி உள்ளது. 
 

click me!