2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி.. 150 இடங்களுக்கு அண்ணாமலை டார்கெட்.. அலறும் அதிமுக.. பதறும் பாமக.

By Ezhilarasan BabuFirst Published Aug 19, 2021, 9:35 AM IST
Highlights

அதேபோல், தலித் மக்களின் வாக்கை ஈர்க்கும் நோக்கில் எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியேனும் அதிக இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் தனித்துவத்தை உருவாக்க வேண்டுமென பாஜக முனைப்பு காட்டி வருகிறது,

அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக 150 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், கூட்டணி கட்சியினரை பல்வேறு கோணங்களில் யோசிக்க வைத்துள்ளது. வடமாநிலங்களில் உள்ள அளவிற்கு பாஜகவிற்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இல்லை, அதலும் தமிழகத்தில் அந்தக் கட்சியால் ஆழ கால் பதிக்கவே முடியவில்லையே என்பது அக்கட்சியினர் மத்தியில் ஏக்கமாகவே இருந்து வருகிறது. 

அதேபோல் அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் போயிருந்தால் அக்கட்சிக்கு 4  எம்எல்ஏக்கள் கூட கிடைத்திருக்க மாட்டார்கள்  என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவுக்கு என தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதே பாஜக தேசிய தலைமைகளின் நோக்கமாக இருந்து வருகிறது. அதற்காக பல்வேறு பகிரத  முயற்சிகளில் அக்காட்சியை ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக இளைஞர்களை கவரும் நோக்கில் காவல் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை அக்காட்சி மாநில தலைவராக நியமித்துள்ளது.

அதேபோல், தலித் மக்களின் வாக்கை ஈர்க்கும் நோக்கில் எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியேனும் அதிக இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் தனித்துவத்தை உருவாக்க வேண்டுமென பாஜக முனைப்பு காட்டி வருகிறது, இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக, மக்கள் ஆசி யாத்திரையை இணை அமைச்சர்கள் எல். முருகன் மேற்கொண்டுள்ளார். நேற்று அதற்காக திருப்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். 

அப்போது அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அதில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று கூறினர், ஆனால் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. இப்போது நான்காக இருப்பது ஏன் 400 ஆக மாறக்கூடாது என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் திராவிடம் என்ற மாயையை நிச்சயம் பாஜக உடைத்து நொறுக்கும் என்றார். 

மக்கள் இளைஞர்கள் மத்தியில் பாஜக மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 150  தொகுதிகளில் வெற்றி என்பது உறுதி என அவர் முழங்கினார். அவரின் இந்த பேச்சு பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த  உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது, மறுபுறம் இது பாஜகவின் கூட்டணி அரசியல் குறித்த வியூகத்தின் வெளிபாடாகவும் பார்க்கப்படுகிறது. பாஜக 150 இடங்களில் வெல்லும் என்றால் அடுத்த தேர்தலில் தனித்து போட்டி என்பதையே அண்ணாமலையின் பேச்சு உணர்த்துவாக உள்ளது. 

அப்படியெனில் அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லையா என்ற கேள்வியும் பல்வேறு தரப்பில் எழுகிறது.? இன்னொரு புறம் அன்புமணி ராமதாசை முதல்வராகும் கனவில் இருந்துவரும் பாமக, அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதும், அன்புமணியை முதல்வர் ஆக்குவதுமே இலக்கு என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கூறிவருகிறார். இந்நேரத்தில் அண்ணாமலையும் அடுத்த தேர்தலில் 150 இடங்களில் வெற்றி என அடிக்கடி கூறிவருவது கூட்டணி கட்சியினரை யோசிக்க வைத்துள்ளது. 
 

click me!