கஞ்சா விற்பனை செய்ய சொல்லி டார்ச்சர்.. திமுக பிரமுகரை நடு ரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொன்ற புள்ளிங்கோ.

Published : Aug 19, 2021, 08:49 AM ISTUpdated : Aug 19, 2021, 08:50 AM IST
கஞ்சா விற்பனை செய்ய சொல்லி டார்ச்சர்.. திமுக பிரமுகரை நடு ரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொன்ற புள்ளிங்கோ.

சுருக்கம்

சரணடைந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சம்பத் குமார் என்பவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு டொக்கா@ ஹரிகுமார் என்பவரின் தந்தையையும், அண்ணன் சரண்குமார் என்பவரையும் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் பொய்வழக்கு கொடுத்து சிறைக்கு அனுப்பியதாகவும்,

அண்ணாநகர் அருகே பைக்கில் சென்ற  திமுக பிரமுகர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறிசெயலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

டிபிசத்திரம் 16வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார்(48). தண்ணீர் கேன் போடும் தொழில் செய்யும் இவர் திமுகவில் 102வது வட்ட அவைத்தலைவராக உள்ளார். நேற்றிரவு இரவு சம்பத்குமார் அண்ணாநகருக்கு வேலை நிமிர்த்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அண்ணாநகர் போகன் வில்லா பூங்கா அருகே வரும் போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சம்பத்தை வழிமறித்து கத்தியால் சரமாரி வெட்டினர், அப்போது சம்பத் குமார் அவர்களிடன் இருந்து தப்பிக்க சாலையில் ஓடினார் ஆனால் விடாது துரத்திய அந்த கும்பல் சம்பத் குமாரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்து விட்டு ஆட்டோவில் தப்பி சென்றனர். 

இதனை கண்ட பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் சம்பத் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய கும்பலை தேடிவருகின்றனர். மேலும் சம்பத் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்ட்டனர். இந்நிலையில் அண்ணா நகரைச் சேர்ந்த, டெக்கா (எ) ஹரிக்குமார்/21, ஜங்குபார் (எ) ஸ்ரீதர் 21, மோகன் வேல் (எ) பிளாக் பெரி /21, நவின்குமார் /24 ஆகிய 4 பேரை போலீசாரை கைது செய்துள்ளனர். 

சரணடைந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சம்பத் குமார் என்பவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு டொக்கா@ ஹரிகுமார் என்பவரின் தந்தையையும், அண்ணன் சரண்குமார் என்பவரையும் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் பொய்வழக்கு கொடுத்து சிறைக்கு அனுப்பியதாகவும், மேலும் சம்பத்குமாரின்  மகன் கோபிநாத் என்பவரும் எதிரிகளை தண்ணீர் கேன் போடவும், கஞ்சா விற்பனை செய்து தருமாறும், இல்லை என்றால் போலீசில் பொய் கேஸ் கொடுப்பேன் என்று மிரட்டி வந்ததாகவும், இதனால் தொல்லை தாங்க முடியாமல் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாநகரில் நடுரோட்டில் திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!