உ.பி தேர்தல்.. தாமரையை விடாமல் சைக்கிளில் மிரட்டலாக பின்தொடரும் அகிலேஷ்.. பரபரக்கும் கருத்து கணிப்புகள்.!

By vinoth kumarFirst Published Jan 11, 2022, 6:15 AM IST
Highlights

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 223 முதல் 235 இடங்களில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவும் கருதப்படுவதால் அனைத்து கட்சியினரும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்கான பல்வேறு உத்திகளை பாஜக தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இதேநேரத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவது தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக மாறியுள்ளது. நோய்த் தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது மிகவும் சவாலான காரியம் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் டிஜிட்டல் முறையில் பிரச்சாரத்தை  நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் முன்கூட்டிய சுதாரித்துக் கொண்ட பாஜக, உத்தரபிரதேசம் முழுவதும் ஜெட் வேகத்தில் தனது  பிரச்சாரத்தையும் நிறைவு செய்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி, ரோட் ஷோ,  பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி முடித்துள்ளனர்.

இந்நிலையில், ஏபிபி-சிவோட்டர் புதிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு 223 முதல் 235 இடங்களும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 145-147 இடங்களும் கிடைக்குமாம். பாஜகவுக்கு 41.5% வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு 33.3% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிர் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் பின்னடைவை சந்திப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்துவார் எதிர்பார்க்கப்பட்ட நிலைளில் ஏமாற்றமே மிஞ்சுவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெறும் 7 இடங்கள் கிடைக்கக் கூடும் என்கிறது இந்த கணிப்பு. 2017 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 19, காங்கிரஸ் 7 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றே கூறி வருகிறது. 

click me!