முழு ஊரடங்கு வராமல் தடுப்பது உங்கள் கையில் தான் இருக்கு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் MRK.பன்னீர் செல்வம்..!

By vinoth kumarFirst Published Jan 11, 2022, 5:23 AM IST
Highlights

கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கையை முதலமைச்சர் தீவிரமாக கவனித்து வருகிறார். இதனை அந்ததந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே முழு ஊரடங்கை சந்திக்க கூடிய ஒரு நிலைமை எழாது என்று, நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தருமபுரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பின்னர், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 21 பொருட்கள் கொண்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு வினியோகம் தொடர்பாக எடை மற்றும் தரம் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர, சந்தைப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும் முகாமினை பார்வையிட்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்;- தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வெளி வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்து வருகிறார்கள். 

கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கையை முதலமைச்சர் தீவிரமாக கவனித்து வருகிறார். இதனை அந்ததந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே முழு ஊரடங்கை சந்திக்க கூடிய ஒரு நிலைமை எழாது என்று, நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், முழு ஊரடங்கு வராமல் தடுக்க முடியும். வள்ளலார் கூற்றுப்படி தனித்திருக்கனும், விழித்திருக்கனும், கொரோனாவை தடுக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

click me!