உங்கள் பெயரை ராகுல் ஜின்னா என்று மாற்றிக்கொள்ளுங்கள்... ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி!

By Asianet TamilFirst Published Dec 14, 2019, 11:41 PM IST
Highlights

“ரேப் இன் இந்தியா எனப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி" என்று பேசி இருந்தார். சுதந்திர போராட்டத்தின் போது வீரசாவக்கர் ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்தார் என்று காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது. அதைக் குறிப்பிடும் வகையில் என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல என்று ராகுல் குறிப்பிட்டார்.
 

ராகுல் காந்தி தன்னுடைய பெயரை ராகுல் ஜின்னா என்று வைத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேக் இன் இந்தியாவை பயன்படுத்தினார். இந்தியா தற்போது ‘ரேப் இன் இந்தியா என மாறியுள்ளது’ என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். ராகுலின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்


இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ‘தேசத்தைக் காப்போம்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ராகுல், “ரேப் இன் இந்தியா எனப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி" என்று பேசி இருந்தார். சுதந்திர போராட்டத்தின் போது வீரசாவக்கர் ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்தார் என்று காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது. அதைக் குறிப்பிடும் வகையில் என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல என்று ராகுல் குறிப்பிட்டார்.


இந்நிலையில் ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி அளித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராகுல் காந்திக்குப் பொருத்தமான பெயர் ராகுல் ஜின்னாதான். அந்தப் பெயரை அவர் வைத்துக்கொள்ளட்டும். முஸ்லிம் ஆதரவைப் பெற நீங்கள் நடத்தும் அரசியலில் முகமது அலி ஜின்னா என்று அழைக்கவே பொருத்தமாக இருக்கும். சாவர்க்கர் என்பது பொருத்தமாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

click me!