உள்ளாட்சித் தேர்தல் ….. திமுக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு !!

By Selvanayagam PFirst Published Dec 14, 2019, 9:50 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பளித்தது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில்   வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில்,  உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள பகுதிகளின் விவரங்களை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்திய, சேலம் மேற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவெடுக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

மற்ற பகுதிகளுக்கும் விரைந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் திமுக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!