குடியுரிமை சட்டத்தை ஏற்கமாட்டீங்களா...? அதை நீங்க சொல்ல முடியாது.... மம்தா பானர்ஜியுடன் மேற்கு வங்க ஆளுநர் மோதல்!

By manimegalai aFirst Published Dec 14, 2019, 11:15 PM IST
Highlights

“நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நமக்கு அளிக்கப்பட்டால், அரசியல் சாசன பதவிகளை வகிப்போர் ஒவ்வொருவரும் அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த சட்டமே நமது நாட்டை ஆட்சி செய்யும் விதி. இச்சட்டம் நாடு முழுவதும் பொருந்தும். அதன்படி நடக்க முடியாது என்று என்னால் கூற முடியாது. அதேபோல வேறு எவரும் இதுபோன்று கூற முடியாது.” என்று மம்தா பானர்ஜிக்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் ஏற்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்த நிலையில், “நாடாளுமன்றம் நமக்கு ஒரு சட்டம் அளித்ததென்றால், அந்தச் சட்டமே நமது நாட்டை ஆட்சி செய்யும் விதி” என்று மேற்கு வங்க ஆளுநர்  ஜக்தீப் தன்கார் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இச்சட்டத்தின்படி ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க முடியும். 2014 மே மாதத்துக்கு முன்பு இந்தியாவில் குடியேறிவர்கள் இந்திய குடியுரிமையைப் பெற தகுதியானர்கள் என திருத்த சட்டம் கூறுகிறது.

 
இச்சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துவருகின்றன. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பேரணி நடத்தப்படும் திரினாமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் இச்சட்டத்தை மேற்கு வங்காளத்தில் ஏற்க மாட்டோம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காளத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.


இதையடுத்து இதுகுறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம். எனவே மக்களே போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்.  சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம்.” என்று தெரிவித்தார்.


 இந்நிலையில், மேற்கு வங்கள ஆளுநர் ஜக்தீப் தன்கார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, “நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நமக்கு அளிக்கப்பட்டால், அரசியல் சாசன பதவிகளை வகிப்போர் ஒவ்வொருவரும் அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த சட்டமே நமது நாட்டை ஆட்சி செய்யும் விதி. இச்சட்டம் நாடு முழுவதும் பொருந்தும். அதன்படி நடக்க முடியாது என்று என்னால் கூற முடியாது. அதேபோல வேறு எவரும் இதுபோன்று கூற முடியாது.” என்று மம்தா பானர்ஜிக்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் தெரிவித்துள்ளார். 

click me!