திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

Published : Oct 07, 2022, 06:30 PM ISTUpdated : Oct 07, 2022, 06:34 PM IST
திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

சுருக்கம்

திமுக போட்ட அதே பிளானை தமிழக பாஜக காப்பி அடித்து உள்ளது.

செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி TwitterSpaces-ல் திராவிடத்தை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடத்தி வந்தது. இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் உரையாடினார் இறுதி நாளில் ட்விட்டரில் உரையாடினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘திமுக ஐ.டி விங் சார்ப்பில் திராவிட இயக்கம் சார்ந்த அறிவார்ந்த உரையாடல்களை இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் ட்விட்டர் ஸ்பேஸில் டிஆர்பி ராஜா நடத்தி இருக்கிறார். திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கமும் கூட. ஒருகாலத்தில் நமது கொள்கையை பரப்ப நடாக மேடை, பத்திரிகை, திரையுலகம் ஆகியவற்றை பயன்படுத்தினோம். கவிதையாக, கதையாக நாவலாக பரப்பினோம்.

இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

அந்த வகையில் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் நம்மை இதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். எதன் மூலமாக மக்களுடன் உரையாட முடியுமோ அதை எல்லாம் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நமது சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் தளமாக நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தங்களுக்கு என்று வரலாறு இல்லாதவர்களும், பிற்போக்குவாதிகளும் திமுகவுக்கு எதிராக பரப்புரைகளை பல ஆண்டுகளாக பரப்பி வருகிறார்கள். இதெற்கெல்லாம் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கடிதங்கள் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் பதிலளித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் அவதூறு பரப்ப காரணம் புதிதாக வரக் கூடிய இளைஞர்களுக்கு முதலிலேயே இந்த பொய்களை பரப்பிவிட வேண்டும் என்ற நோக்கம்தான்.

இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?

திமுகவுக்கு எதிராக பரப்படும் பொய் செய்திகளை ஐடி விங் திறமையாக எதிர்கொள்கிறார்கள்.அதே நேரத்தில் இன்னும் கூடுதல் வேகத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்’ என்று பேசினார். இந்த நிலையில் திமுக போட்ட அதே பிளானை தமிழக பாஜக காப்பி அடித்து அதனை போலவே ட்விட்டரில் ஸ்பேஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. தமிழக பாஜக வெளியிட்டுள்ள பதிவில், ‘"மாற்றத்தை நோக்கி தமிழகம்" என்ற தலைப்பில்  ட்விட்டர் ஸ்பேசில்" உரையாற்றுகிறார் அண்ணாமலை. நாளை இரவு 8 மணிக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..மகளிர் விரும்பினால் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.. வாய்மொழி உத்தரவு உண்மையா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!