டெல்லியை விஷவாயு அறையாக மாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால்.. பாஜக Vs ஆம் ஆத்மி இடையே உச்சக்கட்டத்தில் மோதல் !!

By Raghupati R  |  First Published Nov 5, 2022, 9:42 PM IST

குஜராத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.


பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைக்க போட்டி போட்டு வருகிறது. அதேபோல பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

குறிப்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையே பெரும் யுத்தமே நடைபெற்று வருகிறது என்றே சொல்லலாம். இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக மீது சுமத்தினார். குஜராத்தில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் ஒதுங்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியது.

இதையும் படிங்க..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !

இந்த போட்டியிடாமல் ஒதுங்கினால் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் பாஜக பேரம் பேசியது’ என்றும் பரபரப்பு குற்றசாட்டை வைத்தார். டெல்லியில் காற்று மாசு அளவு அபாயத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தலைவர் தஜீந்தர் பால் சிங் பாகா வைத்துள்ள பேனர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த பேனரில், ‘ஹிட்லரை போல கெஜ்ரிவால் டெல்லியையே விஷவாயு கொண்ட அறையாக மாற்றிவிட்டிருக்கிறார். காற்று மாசுபாட்டால் மக்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் கெஜ்ரிவால் அரசியல் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக மற்றும் ஆம் ஆத்மியின் மோதல் போக்கு உச்சத்துக்கு சென்றுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க..திமுகவின் கைப்பாவையாக ஆளுநர்.! ஒருநாளும் நடக்காது.. திமுகவை எச்சரித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

இதையும் படிங்க..பாஜகவுக்கு தாவும் எடப்பாடி அணி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல் பின்னணி.! பற்ற வைத்த ஓபிஎஸ் டீம் !!

click me!