தூக்கு எடப்பாடியை! உட்கார வை சசிகலாவை.. உள்ளாட்சிக்கு பின் அ.தி.மு.க.வை பட்டி டிங்கரிங் பார்க்குது பா.ஜ.க..!

Published : Feb 05, 2022, 05:59 PM IST
தூக்கு எடப்பாடியை! உட்கார வை சசிகலாவை.. உள்ளாட்சிக்கு பின் அ.தி.மு.க.வை பட்டி டிங்கரிங் பார்க்குது பா.ஜ.க..!

சுருக்கம்

இதை கண்டிப்பாக எடப்பாடியாரும், அவரது சகாக்களும் எதிர்ப்பார்கள். ஆனால் இருக்கவே இருக்கிறார் பன்னீர் செல்வம் என்கிறார்கள்...

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அதிமுகவும் – பாஜகவும் ரெண்டுபட்டு நிற்கிறதே..உண்மையில் நடந்தது என்ன என்று கமலாலய வட்டாரத்தில் பேச்சுக்கொடுத்தோம்.. அவர்கள் சொன்ன சில விஷயங்கள் பகீர் ரகம்.. அதாவது ‘எங்களுக்கு ஏற்பட்டுள்ளது கூட்டணி முறிவு அல்ல. நாங்கள் தனியே நிற்கிறோம் அவ்வளவே. தேசிய அளவில் எங்களின் கூட்டணி தொடர்கிறது’ என்று அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறிய பின் தமிழக பா.ஜ.க. தலைமை இப்படித்தான் சொல்லிக் கொண்டுள்ளது. எடப்பாடியாரோடோ, பன்னீர்செல்வத்தோடோ எந்த மனக்கசப்பும் இல்லவே இல்லை! என்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், கூட்டணி முறிவு விஷயத்தில் எடப்பாடியார் மீது கடும் காட்டத்தில் இருக்கிறதாம் பா.ஜ.க. அவர்தான் எப்படியாவது பாரதிய ஜனதாவை கூட்டணியிலிருந்தே கழற்றி விட்டே தீருவது! என்று ஒற்றைக் காலில் நின்றதாகவும், அதனால்தான் தொகுதி பங்கீடு விஷயத்தில் கொஞ்சம் கூட இறங்கி வராமல், பிடித்த படியாகவே நின்று மனக்கசப்புகளை உருவாக்கி, தங்களை வெளியேற்றிவிட்டார்! என்று டெல்லியிடம் விளக்கியுள்ளது தமிழக பா.ஜ.க. தலைமை.

எடப்பாடியார்தான் கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம்! எனும் தகவல் போயுள்ளதால், அவர் மீது அமித்ஷா, நட்டா இருவருமே செம்ம காண்டில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் முடிந்த பின், ரிசல்ட் எப்படியிருந்தாலும் பரவாயில்லை! என்பதை பார்த்துவிட்டு, அ.தி.மு.க.வினுள் சில அதிரடி மாற்றங்களை உருவாக்கும் முடிவுக்கு டெல்லி பா.ஜ.க. வந்துவிட்டது! என்கிறார்கள்.

அதன்படி, நீண்ட நாட்களாக தங்களின் கரிசன பார்வைக்காக காத்திருக்கும் சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கும் சூழலை பா.ஜ.க. உருவாக்குமாம்.  இதை கண்டிப்பாக எடப்பாடியாரும், அவரது சகாக்களும் எதிர்ப்பார்கள். ஆனால் இருக்கவே இருக்கிறார் பன்னீர் செல்வம். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் எனும் நம்பர் 1 பொசிஷனில் இருக்கும் அவரை வைத்து சசியை உள்ளே அழைப்பதற்கான அத்தனை வேலைகளையும் பா.ஜ.க. பார்க்குமாம்.

அதையும் தாண்டி எடப்பாடியார் அண்ட்கோ திமிறினால், கடைசி ஆயுதமாக ‘ரெய்டு’ எனும் ஆயுதத்தை கையிலெடுத்தால், தானாக வழிக்கு வந்துவிடுவார்கள்! என்பதே டெல்லியின் நம்பிக்கை. கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்த வகையில் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் அனைவருமே மாளாத சொத்து சேர்த்து வைத்துள்ளனர். இவை எப்படி வந்தது? என்று ஒரு கேள்வி கேட்டாலே போதும்! எந்த பதிலும் கிடைக்காது, பேந்த பேந்த விழிப்பார்கள். எனவே அந்த ரூட்டில் அவர்களை அடக்கி, அமைதிப்படுத்திவிட்டு சசிகலாவை உள்ளே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டு, பன்னீரை நம்பர் 2 வாக மாற்றி கட்சியை கொண்டு செலுத்த வைப்பது என்பதே திட்டமாம். அதன் பின் நாடாளுமன்ற, சட்டமன்ற மட்டுமில்லை அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலிலும் கூட பா.ஜ.க.வை பிரிய நினைக்கும் தைரியம் அ.தி.மு.க.வுக்கு வரவே வராது! என்பதே அவர்களின் கெத்து எண்ணமாம்.

தங்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக மனசு நோகும்படி செய்து, கூட்டணியை விட்டு வெளியேற வைத்த எடப்பாடியாருக்கும் பா.ஜ.க. வைக்க துடிக்கும் பெரிய ’செக்’ ஆக இது பார்க்கப்படுகிறது.

ஆனால் இதெல்லாம் நடக்கும் என தெரிந்துதான் துணிந்திருக்கிறாராம் எடப்பாடியார். அவரிடம் இந்த ஆட்டங்கள் எடுபடுமா? என்பதை போகப்போகதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள்… இவை எல்லாம் கட்சிக்காரர்களின் ஊகங்களா அல்லது நடக்கப்போகும் நிஜங்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!