செருப்பை வழிபட்டவர்கள்தான் பாஜகவினர்.. அண்ணாமலையை டீல் பண்ண ஸ்டாலினுக்கு தெரியும்.. கி. வீரமணி கலாய்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 6, 2022, 2:53 PM IST

14 ஆண்டுகள் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து வழிபட்டவர்கள் தான் பாஜகவினர் என்றும், அதனால்தான் அவர்களுக்கு செருப்பின் மீது மோகம், காதல் அதிகரித்துள்ளது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளார். 


14 ஆண்டுகள் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து வழிபட்டவர்கள் தான் பாஜகவினர் என்றும், அதனால்தான் அவர்களுக்கு செருப்பின் மீது மோகம், காதல் அதிகரித்துள்ளது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது தமிழக முதலமைச்சருக்கு நன்கு தெரியும் என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:  திராவிட மாடலே... எங்கள் பஞ்சமி நிலம் எங்கே.. ராமதாஸ் பாணியில் ஸ்டாலினை தெறிக்கவிடும் ஆம்ஸ்ட்ராங்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு :- தந்தை பெரியாரின் 144வது பிறந்த  நாளான செப்டம்பர் 17 அன்று சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது, அன்று பெரியார் பட ஊர்வலம்,  ஒலிபெருக்கி மூலமாக பெரியார் இசைப்பாடல்கள் என்கிற வகையில் கொள்கைப் பிரச்சார விழாவாகவே நடத்தப்பட உள்ளது என்றார்.

இதையும் படியுங்கள்: இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி...! தயார் நிலையில் 60 கேரவன்கள்..! என்ன? என்ன ? வசதிகள் உள்ளது தெரியுமா.?

மேலும் பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூரில் 150 அடி உயரத்தில் பெரிய சிலை அமைத்து அங்கு 9 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் அமைய உள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கான அடிக்கல்  நாட்ட உள்ளார். ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு எதிராக செயல்படும் சிறந்த தலைவராக ராகுல் காந்தி உள்ளார். ஒருபோதும் திராவிட கழகத்திற்கு எதிராக செயல்படும் துணிவு பாஜகவுக்கு இல்லை, அதனால் அரசியல் ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை தாக்கி அரசியல் செய்து வருகின்றனர் என்றார்.

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பு வீசப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 14 ஆண்டுகள் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து வழிபட்டவர்கள்தான் அவர்கள், அதனால்தான் அவர்களுக்கு செருப்பு மீதான மோகம், காதல் அதிகரித்துள்ளது என்றார். அடித்தால் திருப்பி அடிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறாரே என செய்தியாளர்களே எழுப்பிய கேள்விக்கு, அது அவரது தரத்தை காட்டியுள்ளது என்றும் கி வீரமணி கூறினார்.  ஆனால் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது தமிழக முதலமைச்சருக்கு நன்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

click me!