திராவிட மாடலே... எங்கள் பஞ்சமி நிலம் எங்கே.. ராமதாஸ் பாணியில் ஸ்டாலினை தெறிக்கவிடும் ஆம்ஸ்ட்ராங்.

By Ezhilarasan BabuFirst Published Sep 6, 2022, 2:16 PM IST
Highlights

65 ஆண்டு காலம் சமூகநீதி பேசும்  திமுகவே எங்கள் பஞ்சமி நிலம் எங்கே என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கேள்வி எழுப்பியுள்ளார்.  

65 ஆண்டு காலம் சமூகநீதி பேசும்  திமுகவே எங்கள் பஞ்சமி நிலம் எங்கே என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மாகாணத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களிடம் கொடுத்தால் போதும், ஆனால் அதை இந்த திராவிட மாடல் செய்யுமா? எனவே அதை செய்யாத இந்த திராவிட மாடலை புறக்கணிப்போம் என அவர் கூறியுள்ளார்.

பஞ்சமி நிலம் என்பதே நிலமற்ற பட்டியலின ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும், 1892 ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசு இதற்கான சட்டத்தைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியது, ஆங்கில அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவசமாக ஒதுக்கிய நிலத்தை பட்டியல் இன மக்களை தவிர வேறு யாரும் வாங்கக் கூடாது என்பதுதான் சட்டம், ஆனால் இந்த பஞ்சமி நிலங்கள் தற்போது பலராலும் பல அரசியல் சக்திகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால்  நிலமற்ற மக்கள் இன்னும் நிலம் அற்றவர்களாகவே கிடக்கின்றனர்.

இதை வலியுறுத்தி இயக்குனர் திரைப்பட இயக்குனர்கள் ரஞ்சித் முதல் வெற்றிமாறன் வரை திரைப்படங்கள் மூலமாக பேசி உள்ளனர். ஏன் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூட முரசொலி அறக்கட்டளையின் அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார், அதனால் அவரின் குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக தரப்பிலிருந்து அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பின்னர் இந்த அறக்கட்டளையின் மூலப்பத்திரத்தை திமுக எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை தட்டித்தூக்கிய திமுக... மண்ணை கவ்விய அதிமுக..!

இந்நிலையில்தான் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பஞ்சமி நிலம் குறித்தும், திராவிட மாடல் குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை மாகாணத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை சட்டமாக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக DC Land கொடுக்கப்பட்டது. சென்னை மாகாணம் முழுவதும்  12 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது.அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்த நிலம் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டம், இந்த நிலத்தை யாரும் விற்கவும் கூடாது வாங்கவும் கூடாது, அது தலித் மக்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்பது சட்டம்.

1967 இல் இருந்து சமூக நீதி பேசும் ஆட்சியாளர்கள்  உள்ளனர்,  இத்தனை ஆண்டுகளாக பஞ்சமி நிலத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என பல ஆயிரம் பேர் மனு கொடுத்திருக்கிறார்கள், இதற்காக இரண்டு பேர் துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர். இன்றுவரை ஒரு சென்ட் நிலம் கூட மீட்டு கொடுக்கப்படவில்லை, இப்போது திமுக ஆட்சியில் உள்ளது, திமுகவினர் பேசுகின்ற வார்த்தைகள் அனைத்தும் மிகவும் புரட்சிகரமாக இருக்கும், இந்து அறநிலையத்துறையில் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது,  திமுகவின் கொள்கைக்கும் அவர்களின் செயலுக்கும் தொடர்பு இல்லை,

இதையும் படியுங்கள்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் ' தலித் ' .? தாட்கோ இயக்குனர் தந்த தகவல்.. தோண்டி தூர்வாரும் ஆதி திராவிடர் ஆணையம்.

பெரியார் கடவுளை கல் என்றார், திமுகவின் கொள்கையும் கடவுள் மறுப்பு தான், நான் கேட்கிறேன் கல்லுக்கு எதற்கு நிலம், நிலம் மனிதர்களுக்குத் தான், பஞ்சமி நிலத்தை மீட்டு அதை ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு கொடுத்தாலே போதும்,  இன்று வரை அந்த நிலம் மீட்டு தரப்படவில்லை, அப்படியென்றால் மீட்டுத்தராத இந்த திராவிட மாடல் நமக்கு தேவையா என்றால் தேவையே இல்லை. இவ்வாளு ஆம்ஸ்ட்ராங் பேசியுள்ளார். 
 

click me!