அமைச்சர் ராஜ கண்ணப்பன் ' தலித் ' .? தாட்கோ இயக்குனர் தந்த தகவல்.. தோண்டி தூர்வாரும் ஆதி திராவிடர் ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 6, 2022, 1:20 PM IST
Highlights

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என தாட்கோ இயக்குனர் கொடுத்த தகவல் குறித்து விசாரிக்கப்படும் என தேசிய ஆதிதிராவிடர் ஆணையர் தெரிவித்துள்ளார்

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என தாட்கோ இயக்குனர் கொடுத்த தகவல் குறித்து விசாரிக்கப்படும் என தேசிய ஆதிதிராவிடர் ஆணையர் தெரிவித்துள்ளார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய ஆடியோ குறித்து விசாரித்து தடயவியல் சோதனை அறிக்கையை விரைவாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஆதிதிராவிட துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் துணைத்தலைவர் அருண் ஹல்தார், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- 

இதையும் படியுங்கள்:  நெருக்கும் மத்திய அரசு... அலர்ட் ஆன செந்தில் பாலாஜி...! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

கடந்த ஓராண்டில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்திற்கு தமிழகத்திலிருந்து 200 புகார்கள் வந்துள்ளன, ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்முறையில் தமிழகம் இரண்டாவது இடத்திலும் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அரசு அதிகாரியை சாதிப்பெயரைச் சொல்லி திட்டிய ஆடியோ வெளியானது.

இதையும் படியுங்கள்: கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பதவிகளுக்கு தேர்தல்..? வாக்கு பதிவு தேதி அறிவிப்பு...

அந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து அறிந்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல இந்த விசாரணையின்போது ராஜகண்ணப்பன் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என தாட்கோ இயக்குனர் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக இயக்குனர்) தகவல் தெரிவித்தார் தற்போது அந்த  தகவல் குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, தற்போது அதிகாரி சாதி பெயரை சொல்லி இழிவு படுத்தப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இதுவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை, ஆனாலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதம் மாறும் போது  அவர்கள் தானாகவே அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுகின்றனர், மதம் மாறிய பிறகும் அவர்கள் ஆதிதிராவிடர்கள் என சான்று அளிக்கும் பட்சத்தில் அது செல்லாது, அப்படி சான்று வழங்கப்பட்டாலும் அது போலியானது, இதேபோல போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் , சான்றிதழ்களை சரிபார்த்து வழங்கவும் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!