நெருக்கும் மத்திய அரசு... அலர்ட் ஆன செந்தில் பாலாஜி...! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

Published : Sep 06, 2022, 12:54 PM IST
நெருக்கும் மத்திய அரசு... அலர்ட் ஆன செந்தில் பாலாஜி...! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

சுருக்கம்

போக்குவரத்துத்துறை நியமன முறைகேடு விவகாரத்தில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக  அமலாக்கத்துறைக்கு நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்  

வேலை வாங்கி தருவதாக மோசடி

அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2011 முதல் 2015வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்  வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் 3  வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.  இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.  இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

மு.க.ஸ்டாலினை சந்தித்த தங்கதமிழ் செல்வன்..! திடீர் லண்டன் புறப்பட்டார்.. என்ன காரணம் தெரியுமா..?

உச்சநீதிமன்றத்தில் கேவியன் மனு

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ,மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமலாக்கப்பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டது.  சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக அமலக்கத்துறை மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும்   கேவியட் மனுவை செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

எஸ்.பி வேலுமணிக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்.! அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு.. நீதிமன்றத்தில் வாக்கு வாதம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு