இனி நாங்க பேசமாட்டோம் , ரஜினிதான் பேசுவாரு தூள்கிளப்பும் பாஜக..!! ஸ்டாலினை தாறுமாறாக மிரட்டிய எச். ராஜா...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2020, 5:20 PM IST
Highlights

நடிகர்  ரஜினிகாந்தை சீண்டியதால் திக -வின் அத்தனை அட்டூழியங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது  என கூறியுள்ளார்.

திராவிடர் கழகத்துடனான தொடர்பை திமுக இத்துடன் துண்டித்துக்கொள்ள வேண்டும் ,  இல்லை என்றால் கடுமையாக விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜகவின் தேசிய செயலாளர்களின் ஒருவரான எச். ராஜ  திமுகவை எச்சரித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்  துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசிய கருத்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பல முறை பாஜக பெரியாரை விமர்சிக்க முயற்சித்து அதில் ஏற்பட்ட எதிர் விளைவுகள் காரணமாக  பின்வாங்கிவந்தநிலையில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை கடுமையாக விமர்சித்திருப்பது  ஒட்டுமொத்த திராவிட இயக்கங்களையும் கொந்தளிப்படைய செய்துள்ளது.

 

சமூக நீதி, சமத்துவம்  என தன்  வாழ்நாளெல்லாம் தமிழ் மக்களுக்காக போராடிய  திராவிட அரசியலில் ஆதர்ச நாயகனாக பெரியார் இருப்பதே அதற்குகாரணம்.  தற்போது  ரஜினிக்கு ஆதரவாக பாஜக இருந்து வரும் நிலையில், தங்கள் கூட்டணியில் பஜக இருந்தாலும் பெரியார் குறித்து ரஜினி தெரிவித்துள்ள கருத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஒ .பன்னீர் செல்வம்  கடுமையாக கண்டித்துள்ளார் .  அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும்  ரஜினியின் பேச்சை கண்டித்துள்ளனர்.  இந்நிலையில் ஒட்டுமொத்தமாக பாஜக ரஜினியை ஆதரித்து வருவதுடன் ,  அவரின் கருத்தை வலுபடுத்துவதில் கவனம் செலுத்து வருகிறது .   இந்நிலையில்  சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா, நடிகர்  ரஜினிகாந்தை சீண்டியதால் திக -வின் அத்தனை அட்டூழியங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது  என கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், 

திராவிடர் கழகத்துடன் உள்ள தொடர்பை திமுக உடனே துண்டித்துக் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை  திமுக சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.  ரஜினியால்  திகவின் இந்து விரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது ரஜினியின் பேச்சை  நான்  வரவேற்கின்றேன் என்ற  எச். ராஜா , அரசியல் நாகரிகம் ,  பண்பாடு பற்றி திராவிடர் கழகத்த தலைவர்  கி. வீரமணி ரஜினிகாந்திற்கு பாடம்  எடுக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!