அதிமுக அமைச்சர் சரோஜா வெற்றி செல்லுமா..? செல்லாதா..? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Jan 22, 2020, 3:49 PM IST
Highlights

கடந்த 2016-ம் ஆண்டு மே 16ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருபான்மையான இடங்களில் வெற்றி அதிமுக ஆட்சியமைத்தது. இந்நிலையில்,  தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் சரோஜா 86,901 வாக்குகளும், இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் துரைசாமி 77,270 வாக்குகளும் பெற்றதையடுத்து, 9631 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, சமூகநலத்துறை அமைச்சராகப் தற்போது வரை பொறுப்பில் இருந்து வருகிறார். 

ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கு தள்ளழுடி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு மே 16ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருபான்மையான இடங்களில் வெற்றி அதிமுக ஆட்சியமைத்தது. இந்நிலையில்,  தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் சரோஜா 86,901 வாக்குகளும், இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் துரைசாமி 77,270 வாக்குகளும் பெற்றதையடுத்து, 9631 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, சமூகநலத்துறை அமைச்சராகப் தற்போது வரை பொறுப்பில் இருந்து வருகிறார். 

இந்த வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வி.பி.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், மனுவில் ராசிபுரம் தொகுதியில் 18 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும். அதிமுக வேட்பாளர்க்குச் சாதகமாகத் தேர்தல் அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், சரோஜா வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனிடையே, வி.பி.துரைசாமி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவரது வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சரோஜா மனு தாக்கல் செய்தார். ஆனால், அமைச்சர் சரோஜா மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாரதிதாசன் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். 

இந்நிலையில், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகையால், திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

click me!