"கடலில் கண்டெடுத்த முத்து.. இவர்தான் எங்கள் சொத்து.." அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய பாஜகவினர் !!

Published : Mar 12, 2022, 02:08 PM ISTUpdated : Mar 12, 2022, 02:09 PM IST
"கடலில் கண்டெடுத்த முத்து.. இவர்தான் எங்கள் சொத்து.." அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய பாஜகவினர் !!

சுருக்கம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி துணை தலைவர் ஏ. பி. முருகானந்தம் பேசியுள்ளார்.

பாஜகவின் அடுத்த இலக்கு :

பாஜக இளைஞரணியின் தேசிய துணைத்தலைவரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான ஏ. பி. முருகானந்தம் தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏ. பி. முருகானந்தம் பேசிய போது, ‘அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி புகழராம் சூட்டினார். 

தமிழக தலைவர்கள் நிர்வாகிகள் மீது அவர் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகம் தான். இது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்த 25 ஆண்டுகாலம் இந்தியாவில் ஆட்சியில் இருக்கப்போவது பாஜக தான். திமுகவை பற்றி நாம் பயப்பட தேவையில்லை. 

அண்ணாமலை :

அண்ணாமலை எந்த ஒரு தொண்டனையும் விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் தூங்குவதே இரவு 2 மணிக்கு மேல் தான். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார். நாம் அதற்கு பாடுபட வேண்டும். எந்த உதவி தேவைப்பட்டாலும் எங்களை அழைக்கலாம்.

மக்களை நாம் சென்றடைய வேண்டும். வார்டு வாரியாக இனி கூட்டங்கள் நடத்தப்படும். திமுகவில் எத்தனை தலைவர்கள் வந்தாலும், பிரதமர் மோடி மற்றும் தமிழக தலைவர் அண்ணாமலை போல் இருக்க முடியாது. இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற நிகழ்ச்சியை தமிழகத்தில் நாம் தொடங்கினோம். 

இது தற்போது தேசிய அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2006 ல் இருந்து தற்போது வரையிலான தேர்தலில் மாற்றுக்கட்சி வேட்பாளர் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கட்சியின் சித்தாத்தங்கள் குறித்து பேச வேண்டும். தேமுதிக, அமுமுக, நாம் தமிழர் மற்றும் மநீம ஆகிய நான்கு கட்சிகளையும் நாம் பின்தள்ளியுள்ளோம். 

மொடக்குறிச்சி தொகுதியில் கங்கனம் கட்டிக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தோம்.  சுலபமாக வெற்றி பெறலாம் என்ற மமதையில் இருந்ததால் களப்பணியாற்றினோம். கோவை பாஜகவின் கோட்டை. ரத்தத்தை சிந்தி இக்கட்சியை இங்கு வளர்த்துள்ளோம்’ என்று பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!