திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.. ஆளுங்கட்சியை அலறவிடும் விஜயகாந்த்..!

Published : Mar 12, 2022, 01:39 PM IST
திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.. ஆளுங்கட்சியை அலறவிடும் விஜயகாந்த்..!

சுருக்கம்

 தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும். மேலும், ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புங்கள்

இதுதொடர்பாக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றி, டெட் மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன் வர வேண்டும். 

இதையும் படிங்க;- TASMAC: டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. இனிமேல் இதெல்லாம் கட்டாயம்.. மீறினால் ஆப்பு தான்.!

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை

மேலும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிட வேண்டும். தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும். மேலும், ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமன தேர்வு என்ற அரசாணை 149 ஐ நீக்கம் செய்துவிட்டு, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 117வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!