ஸ்டாலின் ராகுல் காந்தியை ஆதரிப்பதால் பாஜக திமுகவை எதிர்க்கிறது - அழகிரி குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Jun 19, 2023, 5:42 PM IST

தன்னை ஒருவர் இழிவாக பேசியதால்  கோபம் அடைந்த குஷ்பூ மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பாஜக பிரமுகர் பிரிட்ஜ் பூஷன் மீது ஏன் கோபம் வரவில்லை என  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.


சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து கே எஸ் அழகிரி தொண்டர்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கி ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாடினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தியின் 54வது பிறந்தநாள் விழா முன்னிட்டு சென்னையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. 2024 க்காண நாடாளுமன்ற தேர்தலில்  தமிழகத்தில் 40  தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கும், அதற்கான கடுமையான களப்பணி ஆற்றுவது  என்கின்ற உறுதி மொழியை இன்று ஏற்றோம்.

Latest Videos

undefined

டாஸ்மாக் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் கற்பனையானவை - அமைச்சர் விளக்கம்

ராகுல் காந்தியின் பாதையைப் பின்பற்றி தமிழக காங்கிரஸ் செயல்படும். அதற்கு ஒரே எடுத்துக்காட்டு தேர்தல் வெற்றி தான்.  நாம் நம்முடைய எதிரிகளை சந்திக்க வேண்டிய களம் தேர்தல் களம். தமிழகத்தில் பாஜக தன்னுடைய திருவிளையாடல்களை செய்து பார்க்கிறார்கள். மாநில அரசாங்கம் ராகுல் காந்திக்கு ஆதரவாக இருக்கிறது. ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என நினைக்கிறது. எனவே   இந்த ஆட்சிக்கு ஊறு விளைவிக்க வேண்டும் என பாஜக செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய அடிப்படை சிந்தனையை வேரறுக்க வேண்டும். 

பாஜகவில் இருக்கின்ற குஷ்பு அவர்கள் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அவருடைய வருத்தம் நியாயமானது தான். ஒரு தோழர் தரக்குறைவாக அவரை பேசி இருக்கிறார். அது கண்டிக்கத்தக்கது. அந்த செய்தியை கேட்டறிந்த பிறகு திமுக அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. அதற்காக திமுகவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஆனால் அதே சமயம் குஷ்பூவிடம் ஒரு எளிமையான கேள்வியை கேட்க  விரும்புகிறேன். இந்த கோபம் ஏன் உங்களுக்கு எல்லா இடங்களிலும் வருவதில்லை? விளையாட்டு  வீராங்கனைகள்  அனைவரிடமும் பாலியல் வன்முறை செய்த பாஜகவை சேர்ந்த பிரிஜ் பூஷன் மீது ஏன் கோபம் வரவில்லை. உங்களுக்கு என்றால் கோபம் வருகிறது. மற்ற பெண்களுக்கு என்றால் கோபம் வரவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; பாபநாசம் பட பாணியில் உடலை புதைத்த கொடூரம்

மணிப்பூரில் மாநிலமே இல்லை. அரசாங்கமே இல்லை. நிர்வாகமே இல்லை என பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், விளையாட்டு வீரர்களும் கூறுகின்றனர். யாருடைய உயிருக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை. நாட்டு பிரதமருக்கு அமெரிக்கா செல்ல நேரம் இருக்கிறது. பல நாடுகளுக்கு செல்ல நேரம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இடங்களுக்கு செல்ல நேரமில்லை எனக் கூறினார்.

click me!