நம்மாழ்வாரை டேக் ஓவர் செய்த பாஜக..!! பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு விவசாய அணி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2020, 5:50 PM IST
Highlights

மத்திய அரசு திட்டங்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மாடித்தோட்டம் திட்டத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். நம்மாழ்வார் சொன்ன மரங்களை அடங்கிய  மாடித்தோட்டங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்

உடல்நலக் குறைவால் நேற்று மரணமடைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரனாப் முகர்ஜியின் உருவப்படத்திற்கு தமிழக பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா, விவசாய அணி மாநில தலைவர் ஜி.ஜே.நாகராஜ் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து பாஜக விவசாய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே.நாகராஜ் தலைமையில் அந்த அணியின் கூட்டம் கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாகராஜ், மத்திய அரசு திட்டங்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மாடித்தோட்டம் திட்டத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். 

நம்மாழ்வார் சொன்ன மரங்களை அடங்கிய  மாடித்தோட்டங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பிரதமர் திட்டங்களில் முறைகேடு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும்போது திட்டம் அல்லது பிரதமர் பெயர் சொல்வதில்லை எனவும், கட்சி சார்பாக செயல்படுத்தப் படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த நடைமுறையை தமிழக அரசு தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றியும், மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காதது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாகராஜ், வாக்கு வங்கிக்காக எதையும் பாஜக செய்யாது என்றும், முறையாக ஆய்வு செய்த பிறகு ஒப்புதல் அளிக்கும் என தெரிவித்தார். 

விவசாயம் சார்ந்த தமிழக அரசின் செயல்பாடு சில இடங்களில் நன்றாக இருப்பதாகவும், சில இடங்களில் அதிமுக தலையீடு மற்றும் கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை இருப்பதாக தெரிவித்தார். அவினாசி அத்திக்கடவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளதற்கு பாராட்டு தெரிவித்த அவர், பல நீர் ஆதார திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், முதல்வர் பழனிசாமி செய்வார் என நம்பும் அதேவேளையில், நடவடிக்கை எடுக்கும் வரை காத்திக்கொண்டிருக்க மாட்டோம் என தெரிவித்தார். பல்வேறு அணை திட்டங்களுக்கு நிலம் அளித்த மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் என்றும்,  கூட்டணி வேறு - மக்கள் பிரச்சினைகளில் எங்கள் செயல்பாடு வேறு என்றும் விளக்கம் அளித்தார். பாஜக பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் கெஞ்சியதில்லை என்றும், நாங்கள் கை காட்டும் கட்சிதான் தமிழகத்தை ஆளும் எனவும், பாஜக-வை கைவிடுபவர்கள், ஆட்சியை கைவிடுவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 

click me!