எத்தனை அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்போடலாம்..? திருப்பி அடிக்கும் எல்.முருகன்..!

By Thiraviaraj RMFirst Published Sep 1, 2020, 5:27 PM IST
Highlights

சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பது தொடர்பாக வழக்குகள் போட வேண்டும் என்றால்  அத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பி மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு போட வேண்டி இருக்கும்? 

தமிழக அமைச்சர்கள் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. டிசம்பர் மாததில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’பிரணாப் முகர்ஜி நம்முடன் இல்லை என்பது வேதனைக்குரியது, அவரது பொருளாதார சிந்தனைகள் நாட்டிற்கு உறுதுணையாக இருந்தது.

திமுகவில் இருந்து பல சீனியர் தலைவர்கள் பா.ஜ.க-வை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டத்தில் தமிழகம் அதிக பலன் அடைந்து இருக்கிறது. வரும் காலம் பா.ஜ.கவின் காலமாக இருக்கும். பா.ஜ.கவை சேர்ந்த கணிசமான நபர்கள் சட்டமன்றத்தில் இருப்பார்கள். கூட்டணியல் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி பலமாக இருக்கிறது. 60 இடங்களில் தனித்து போட்டியிட்டு பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது. 

சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பது தொடர்பாக வழக்குகள் போட வேண்டும் என்றால்  அத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பி மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு போட வேண்டி இருக்கும்? தமிழக அமைச்சர்கள் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்க கூடாது. டிசம்பர் மாதவாக்கில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். ரஜினி ஆன்மீகவாதி, தேசியவாதி, அவர் அரசியலுக்கு வந்தால் பா.ஜ.க வரவேற்கும்’’என்று அவர் தெரிவித்தார்.

click me!