ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அப்போதைய தமிழக அரசை வழிநடத்தியது மத்திய அரசு தான். அதனால் ஜல்லிக்கட்டுக்கான வெற்றியை கொண்டாட மத்திய அரசுக்கு தான் முழு உரிமை உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணை தலைவர் நயினார் நகேந்திரன், சுமதி வெங்கடேசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எச்.ராஜா, மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்து 10 வது ஆண்டு துவங்குகின்றது.
கோவிட் காலத்தில் நெருக்கடியில் இருந்தாலும் பொருளாதாத்தில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி பாதையில் முதல் இடத்தில் இந்தியா இருக்கின்றது. இதற்கு காரணமான மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபட்டு இருக்கின்றது. மேலும் ஜல்லிகட்டுக்கு யார் யாரோ கிரிட்டிட் எடுத்து கொள்கின்றனர். ஆனால் உண்மையில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் போது ஜல்லிகட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.
திருச்சியில் அழகு நிலையம் என்ற பெயரில் விசாரம் நடத்திய 2 பேர் கைது; 2 பெண்கள் மீட்பு
2017 ஜனவரியில் மாநில அரசை நாம் வழிநடத்தி, மாநில அரசை அவசர தீர்மானம் நிறைவேற்ற சொல்லி, அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து ஓரே நாளில் 4 அமைச்சங்களை பார்த்து அனுமதி கொடுக்கப்பட்டது. 2017 முதல் ஜல்லிகட்டு போட்டி நடத்தி கொண்டு இருக்கின்றோம். 2016ல் போடப்பட்ட அரசாணைக்கு வாங்கிய தடையானது உச்சநீதிமன்றத்தில் இப்போது நீங்கி இருக்கின்றது. அப்போது முதல்வராக இருந்தவர் ஒ.பி.எஸ், இதற்கு அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி உரிமை கொண்டாடினால் தவறில்லை, திமுக ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது.
ஜல்லகட்டு மீண்டும் நடைபெற காரணமான நரேந்திரமோடிக்கு நன்றி பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது. கேரளாவில் இருந்து கழிவுகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றது. கேரளாவிற்கு ஏராளமான கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது.
பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு; ஒரு பிரிவினர் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமாக மது இருக்கின்றது. மது விலக்கு கொண்டு வரப்பட வேண்டும். கனிமவளங்கள் கடத்தலையும், மதுவையும் கட்டுபடுத்தாத திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. கள்ள சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டித்து நாளை மகளிரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். மகளிரணி சார்ரபில் ஆளுநரை பார்த்து மனு அளிக்கப்பட உள்ளது.