நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் புலிகேசி அரசை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக உண்மை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம்;- கள்ளச்சாராயம் குறித்து அதிசய விளக்கத்தை டிஜிபி வழங்கியுள்ளார். கள்ளச்சாராயத்தை யார் விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயத்தால் 22 அப்பாவிகள் பலியான நிலையிலும் ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க;- கள்ளச்சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டியவர் அமைச்சர் செஞ்சி மஸ்தான்! சாதி மோதலை தூண்டும் பொன்முடி! சி.வி.சண்முகம்
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக உண்மை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை. கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜாவுக்கு கேக் ஊட்டியவர் அமைச்சர் செஞ்சி மஸ்தான். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்காமல் அரசு அனுமதியோடு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க;- கோமாளி ஜெயக்குமாருக்கு ஊழலை பற்றி பேச தகுதியே இல்லை! அவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை! வைத்திலிங்கம் விளாசல்
கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்ப சாதி மோதலை திமுக அமைச்சர் பொன்முடி துண்டுகிறார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் புலிகேசி அரசை ஸ்டாலின் நடத்தி வருகிறார். ஸ்டாலின் ஒரு நாடக நடிகர். பொம்மை முதலமைச்சர் என சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.