பேனர் வைப்பதில் தகராறு; ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கால் பதற்றம்

By Velmurugan s  |  First Published May 19, 2023, 1:46 PM IST

சேலத்தில் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கொடியை அகற்றியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.


சேலம் மாநகர் மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் மாநில நிர்வாகிகள் வைத்தியலிங்கம், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு முன்பு பேனர்கள் மற்றும் அதிமுக கொடிக்கம்பங்களை நட்டனர். 

Latest Videos

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என கூறி கொடியை அகற்றியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் இருந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு; ஒரு பிரிவினர் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மேலும் அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நிர்வாகிகள் டவுன் உதவி ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தவறான திசையில் வந்த தனியார் பேருந்து; ஓட்டுநரின் கவனக்குறைவால் கால்களை இழந்த பெண்
 

click me!