சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறதா..? பாஜக நிர்வாகியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

By Ajmal KhanFirst Published Aug 2, 2022, 10:41 AM IST
Highlights

மத்திய அரசு ஒவ்வொரு சிலிண்டருக்கும்  ரூபாய் 200 /-  மானியமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது என பாஜக மாநில துணைதலைவர் நாரயணன் திருப்பதி கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 

சமையல் சிலிண்டர் மானியம் ரூ.200

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான  மானியம் அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மானியப் பணம் சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால் மானியமே வரவில்லை என்று சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள பணியாளர்களுக்கு ஒவ்வொரு சமையல் சிலிண்டருக்கும் 200 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 6,100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என மத்திய நிதி அமைச்சரும் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு பெற்றுள்ள சுமார் 9 கோடி பேருக்கு மட்டுமே இந்த மானியமானது வழங்கப்பட உள்ளது. மற்ற 21 கோடி பேருக்கும் சமையல் எரிவாயுவிற்கான எந்தவித மானியம் வழங்கப்படாது என்ற தகவலும் வெளியானது. 

ரப்பர்,மேகி விலை கூடிடுச்சு.! பென்சிலை திருடுகிறார்கள்... வேதனையோடு மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி

 

சிலிண்டருக்கு மானியம் திமுக வாக்குறுதி என்ன ஆனது..?

இந்தநிலையில்  சிலிண்டர் மானியம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் பேசிய மாதம் மாதம் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி டுவிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "சிலிண்டர் மானியம் தருகிறோம் என்று சொல்லி கோட்டாவை விட்டு கொடுத்து விடுங்கள் என்று சொன்னீர்கள்.பலரும் விட்டு கொடுத்தார்கள். ஆனால் இன்று பலருக்கும் எல் பி ஜி மானியம் வங்கிக் கணக்குக்கு வருவதே இல்லை"என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.  மானியம் அனைவரின் வங்கி கணக்கில் பற்று வைக்கப்பட்டது. மானியம் மக்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்ற புள்ளிவிவரங்களை உங்களால் அளிக்க முடியுமா? கொரோனா கால கட்டத்தில் 15 கோடிக்கும் அதிகமான சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்பட்டது என்பது தங்களுக்கு தெரியுமா? அதன் மதிப்பு என்ன என்பது தங்களுக்கு தெரியுமா? கடந்த மே மாதம் முதல் மத்திய அரசு ஒவ்வொரு சிலிண்டருக்கும்  ரூபாய் 200 /-  மானியமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. ஆனால், உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு சிலிண்டருக்கு ரூபாய் 100 /- வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்களே, செய்தீர்களா? நீங்கள் செய்தீர்களா? மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளீர்கள் என்பதே உண்மை என பாஜக மீநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருந்தார். 

கர்நாடகாவில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: மைசூரு-ஹாசன் நெடுஞ்சாலையில் மாணவர்கள் போராட்டம்: தீவைப்பு

மானியம் வரவே இல்லை

டுவிட்டரில் நாராயணன் திருப்பதியின் பதிவிற்கு ஏராளமான நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நாம் இவ்வளவு Update ஆக இருக்கும் போதே இவ்வளவு கூறுகிறார்களே! வட இந்தியர்களை எப்படியெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றுவார்களோ? என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார், மற்றொரு நபர் மானியத்தை படிப்படியா குறைச்சிட்டே வந்து கடைசியா சிலின்டருக்கு 15ரூ மானியம் என்கிற நிலையில் நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார். ஏராளமான நெட்டிசன்கள் தங்கள் வங்கி கணக்கை காண்பித்து எவ்வளவு சிலிண்டர் மானியம் வந்துள்ளது என்று விவரத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த மாதம் 24 ரூபாய் மட்டுமே மானியமாக வந்ததாகவும் 200 ரூபாய் வரவே இல்லையென தங்களது பதிவில் விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

அரைலிட்டர் பாலில் 85மில்லி எடை குறைந்தது ஏன்..? வேலியே பயிரை மேய்கிறது...திமுக அரசுக்கு எதிராக சீறிய ஓபிஎஸ்

 

click me!