சபாநாயகரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் - புதுவையில் பரபரப்பு...

First Published Jul 12, 2017, 11:47 AM IST
Highlights
BJP demonstrated condemnation of the speaker in puducheery


புதுச்சேரியில், பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்ய மறுத்ததை அடுத்து, ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

ஆளுநர் கிரண்பேடி, நியமன 3 எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக, குடியரசு தலைவர், பிரதமர் சந்திப்பதற்காக அண்மையில் டெல்லி சென்றிருந்தார். இதையடுத்து, புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கமும், டெல்லி சென்றிருந்தார்.

3 நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் இன்று பாஜகவினர் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சபாநாயகர் வைத்தியலிங்கத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

அப்போது, சபாநாயகர் வைத்தியலிங்கம் பதவி விலக கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை முன் திரண்ட பாஜகவினர் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் வைத்தியலிங்கம் உருவ பொம்மைகளை எரித்தும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.

click me!