
டெல்டா மாவட்டங்களில் ஒஎன்ஜிசி குழாய் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு தமிழக எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்டா மாவட்டங்களில் ஒஎன்ஜிசி குழாய் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என பொன்.ராதா கூறியதை ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மின் உற்பத்திக்கு மாற்று வழி உள்ளதால் மக்களை அச்சுறுத்தும் அணு உலை வேண்டாம் எனவும் எனவே ஒஎன்ஜிசி குழாய்களை அமைக்க கூடாது எனவும் தெரிவித்தார்.