
தமிழகத்தில் 225 மில்லி லிட்டர் அளவில் 10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 10 ரூபாய்க்கு 225 மில்லி லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றார்.
இந்த பால் பாக்கெட்டில் 4.5 சதவீத கொழுப்பு சத்தும் 8.5 சதவீதம் இதர சத்துக்கள் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் 30 லட்சம் ரூபாய் செலவில் தர்மபுரி பால் பண்ணைக்கு புதிய உபகரணங்கள் வாங்கப்படும் என்றும், சென்னையில் 115 தானியங்கி பால் நிலையங்கள் பாலகங்களாக மாற்றப்படும் என்றும் கூறினார்.
மூவாயிரம் மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளில் ஆவின் பாலகம் தொடங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.