
கடந்த ஞாயிறன்று சென்னை வந்த மத்தியமைச்சர் வெங்கய்யா நாயுடுவும், கடந்த திங்களன்று கோவை வந்த மத்தியமைச்சர் பொன்னாரும் “ஜனாதிபதி ஆட்சிக்குப் பின் தமிழக அரசை கலைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.” என்று கூறினார்கள்.
இந்த வாசகத்தைக் கண்டு எடப்பாடி அண்ட்கோ மகிழவில்லை, மாறாக மிரள்கிறார்கள், காரணம் ”ஆட்சியை கலைக்கும் அதிகாரமும் வலுவும் எங்களுக்கு இருக்கிறது, ஆனாலும் கலைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஒருவேளை உங்கள் மேல் எங்களுக்கு அதிருப்தி உருவானால் கலைத்துவிடுவோம்.” என்று தங்களை மிரட்டும் தொனியில் இந்த பேச்சு இருப்பதாகவே எடப்பாடி டீம் எடுத்துக் கொள்கிறது என்று நமது நியூஸ்ஃபாஸ்ட் இணையதளம் நேற்று காலையிலேயே செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர் நியூஸ்ஃபாஸ்டின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார்.
தமிழக காங்கிரஸின் மீனவரணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய அரசர் “அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க மாட்ட்டோம் என வெங்கய்யா நாயுடு கூறுகிறார். அவரது பேச்சு ’நாங்கள் நினைத்தால் முடியும்.’ என அச்சுறுத்துவது போல் உள்ளது. புதுச்சேரியிலும் பா.ஜ.மூக்கை நுழைத்து பிரச்னை செய்கிறது. தமிழகத்தில் எந்த காலத்திலும் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.” என்றார்.
இதை இணையதளங்களை தொடர்ந்து கண்காணித்து அவற்றில் வரும் அரசியல் கட்டுரைகளுக்கு விமர்சன மதிப்பீடு வழங்கும் நபர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அவர்கள் “ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரே, அதுவும் அரசியல் வாழ்வில் பொன்விழா காணும் ஆளுமையே என்.எஃப். (நியூஸ்ஃபாஸ்ட்) இணையதளத்தின் கருத்தை எடுத்து ஆள்கிறார் என்பது இந்த தளம் அரசியல் விஷயங்களை அரசியல்வாதிகளுக்கு முன்பாகவே மிக சரியாக கணித்து சொல்கிறது என்பதற்கு நேர்த்தியான உதாரணம்.
’ஒழுங்குநடவடிக்கைக்கு ஆளாக இருந்த தனது எம்.எல்.ஏ.க்களை ‘மன்னிப்பு’ கேட்க வைத்து ஸ்டாலின் காப்பாற்றியதால், ஆளுங்கட்சியுடன் சில விஷயங்களில் ஸ்டாலின் சமரசம் செய்ய நேரலாம்’ என்று அன்றே இடித்துக் கூறியது நியூஸ்ஃபாஸ்ட் இணையதளம். அதே கருத்தைத்தான், விமர்சனத்தைத்தான் இன்று முக்கிய பத்திரிக்கைகள் ஸ்டாலின் மீது வைக்கின்றன. மானியக்கோரிக்கைகள் எதிர்கட்சிகளின் பெரிய எதிர்ப்பில்லாமல் நிறைவேறுவது சமரசத்தின் விளைவுதான் என்று தலைமைச்செயலக உயரதிகாரிகளே பேசுகின்றன.
இந்த விஷயத்தில் ஏற்கனவே சிக்ஸரடித்திருந்த என்.எஃப். இணையதளத்துக்கு தாராளமாய் கொடுக்கலாம் ஒரு சாம்பியன் கோப்பை.” என்கிறார்கள்.
கோப்பைகள் வேண்டாம், வாசகர்களின் ’அட! ஆமால்ல, இதை அன்னைக்கே கணிச்சிடுச்சே நியூஸ்ஃபாஸ்ட். சூப்பர்ப்’ எனும் ஒற்றை வரி பாராட்டே கோடிகளுக்கு சமானம்.
உங்களின் தட்டிக்கொடுத்தலை தலைவணங்கி பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்கிறோம்!