விநாயகரை இழிவுபடுத்திவிட்டார்...? முத்தரசனை கைது செய்திடுக..! இறங்கி அடிக்கும் பாஜக..

By Ajmal Khan  |  First Published Sep 6, 2022, 9:20 AM IST

விநாயகரை இழிவுப்படுத்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்


விநாயகர் சதுர்த்தி வாழ்த்து 

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். ஆனில ்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாரிமுனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், அமைச்சர் சேகர்பாபு கடவுள் நம்பிக்கை உடையவர், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவன், ஆனால் எங்களுக்குள் நட்பு உள்ளது.  கணேசனின் தாயாரான பார்வதியம்மாள் பல மாதங்களாக, பல வருடங்களாக குளிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் கங்கைக்கு குளிக்கப் போயிருக்கிறார். குளிக்கும்போது ஏராளமான அழுக்கு வந்திருக்கிறது. அந்த அழுக்கை உருட்டி வைத்திருக்கிறார். அதுதான் விநாயகராகி விட்டது. 

Tap to resize

Latest Videos

ஜெ.வின் போயஸ் கார்டன் வீடு விற்பனைக்கா? தீபா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ..!

முத்தரசனை கைது செய்திடுக

குளித்து முடித்த பிறகு அந்த அழுக்கை தண்ணீரில் கரைத்து விட்டிருக்கிறார். இப்படித்தான் வரலாற்றில் கூறிகிறது. எனவே  அந்த அழுக்கைப் போய் நாங்கள் ஏன் கும்பிட வேண்டும். அந்த அழுக்குக்கு எதற்காக நாங்கள் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என முத்தரசன் பேசியிருந்தார். இந்த கருத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விநாயகரை இழிவுபடுத்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கைது செய்யப்பட வேண்டும். மத துவேஷங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்ன அவர்கள், திராவிட முன்னேற்ற கழக அரசு மதசார்பற்றது என்பது உண்மையென்றால், தாமதிக்காமல் தலைவர் (1/2)

— Narayanan Thirupathy (@Narayanan3)

 

இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விநாயகரை இழிவுபடுத்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கைது செய்யப்பட வேண்டும். மத துவேஷங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்ன தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்ற கழக அரசு மதசார்பற்றது என்பது உண்மையென்றால், தாமதிக்காமல் தலைவர் என்ற போர்வையில் இருக்கும் வாய்க்கொழுப்பெடுத்த, அநாகரீக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன்  என்ற சமூக விரோதியை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய உத்தரவிட  வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

இபிஎஸ் அரசியல் அனாதை...! ஓபிஎஸ் தலைமையில் விரைவில் அதிமுக பொதுக்குழு...! பெங்களூர் புகழேந்தி அதிரடி

 

click me!