இபிஎஸ் அரசியல் அனாதை...! ஓபிஎஸ் தலைமையில் விரைவில் அதிமுக பொதுக்குழு...! பெங்களூர் புகழேந்தி அதிரடி

By Ajmal Khan  |  First Published Sep 6, 2022, 8:08 AM IST

எடப்பாடி பழனிசாமி எந்தவித பதவியும் இல்லாமல் அனாதையாக இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்


 அதிமுக அதிகார மோதல்

ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் என அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமையாக அதாவது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ்- இபிஎஸ் என இருவருக்கும் மாறி மாறி தீர்ப்பு வந்த நிலையில்,  தற்போது உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்யவுள்ளார். இதற்க்கு செக் வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் தாக்கல் செய்துள்ளார். இந்த பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் தரப்போ அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

ஓபிஎஸ்சை செயல்படவிடவில்லை

இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி,  தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை கட்சியின் தலைமை ஓ. பன்னீர் செல்வம் தான் அவருடைய முடிவு தான் செல்லும். அது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிலேயே உள்ளது. இதை நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுவாக தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஓபிஎஸ் தான் தேர்தல் ஆணையத்தின் படிவத்தில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்தார்.  அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது அரசு திட்டங்கள் தொடர்பாகவும்,  கட்சி தொடர்பாகவோ எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வத்திடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை, ஓ பன்னீர்செல்வத்தை கட்சியிலும் ஆட்சியிலும் செயல்பட விடாமல் தடுத்து வைத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. பணம்,பதவி அதிகார உச்சியிலேயே எடப்பாடி பழனிசாமி இருந்ததாகவும் விமர்சித்தி இருந்தார். 

டெல்லி செல்லும் ஓபிஎஸ்.. மறுபக்கம் சின்னம்மா, டிடிவி தினகரன்.. தூதுவிட்ட ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத்.!

விரைவில் அதிமுக பொதுக்குழு

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அனாதையாக உள்ளார்.  தற்போது எந்தவித பதவியும் அவரிடம் இல்லை, இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டாம் என்று எழுதியும் கொடுத்து விட்டார். அதிமுக பொது குழு மிகவும் சிறப்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது நடைபெற்றது. அப்பொழுது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜெயலலிதா எழுதிய கடிதத்தை வீட்டில் பெரும்பாலான தொண்டர்கள் பத்திரமாகவும் வைத்து இருப்பார்கள்.  பொதுக்குழு புகைப்படத்தையும் வீட்டில் அலங்காரமாக மாற்றி வைப்பார்கள்.  ஆனால் தற்பொழுது பொதுக்குழு, பொதுக்குழு போலவாக நடைபெறுகிறது என வேதனை  தெரிவித்தார். எனவே நிச்சயமாக விரைவில் அதிமுகவின் பொது குழு ஓபிஎஸ் தலைமையில் கூட்டப்படும் என உறுதிபட கூறினார்.

இதையும் படியுங்கள்

ஜெ.வின் போயஸ் கார்டன் வீடு விற்பனைக்கா? தீபா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ..!

click me!