காங்கிரஸை விட 7 மடங்கு அதிகமாக நன்கொடை வாங்கிய பாஜக: ஏடிஆர் அமைப்பு தகவலில் அதிர்ச்சி

By Asianet TamilFirst Published Feb 28, 2020, 2:52 PM IST
Highlights

கடந்த 2018-19-ம் நிதியாண்டில் நன்கொடை மூலமாக பாஜக ரூ.742 கோடியும், காங்கிரஸ் ரூ.148 கோடியும் திரட்டியதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்)அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தோ்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்த நன்கொடைகள் அனைத்தும் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பெறப்பட்ட தொகையைக் கணக்கில் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது

கடந்த 2017-18 ம் ஆண்டில் பாஜக நன்கொடையாக ரூ.437.04 கோடி பெற்றநிலையில்  2018-19-ல் ரூ. 742.15 கோடியாக அதிகரித்துள்ளது. தனிநபா், நிறுவனங்கள் என 4,483 நன்கொடைகள் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டது.

கடந்த 2017-18-இல் காங்கிரஸ் நன்கொடையாக ரூ.26 கோடி பெற்றநிலையில் அதன் நன்கொடை பெற்ற அளவும் 2018-19-ல் ரூ. 148.58 கோடியாக அதிகரித்துள்ளது. எலக்டோரல் டிரஸ்ட் என்ற அமைப்பு மொத்தம் ரூ.455.15 கோடி நன்கொடையை 2018-19-ஆம் நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கும் அளித்துள்ளது.

. கடந்த 2018-19-ஆண்டில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை நன்கொடையாகப் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி, 13-வது ஆண்டாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது

click me!