பாஜகவின் 14 பாலியல் வீடியோக்கள்... ஜோதிமணி விடுத்த எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Sep 21, 2021, 12:58 PM IST
Highlights

இந்தியா முழுவதும் பாலியல் பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது. பாஜகவின் உள்ளும், வெளியிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும்.

சமீபத்தில் பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவனின் பாலியல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்பு அவர் தாமாகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து தற்போது கர்நாடாவை சேர்ந்த பாஜகவின் முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவின் பாலியல் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி  தனது டிவிட்டர் பக்கத்தில், ’’தமிழகத்தில் பாலியல் பாஜகவின் கே.டி.ராகவன் பாலியல் வீடியோவைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவின் முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவின் பாலியல் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் வெளிவராத பாஜகவின் 14 வீடியோக்கள் பாஜகவின் அதிகார அச்சுறுத்தலால் முடக்கப்பட்டிருக்கிறது.

 

இந்தியா முழுவதும் பாலியல் பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது. பாஜகவின் உள்ளும், வெளியிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும். அதனால் தான் குற்றவாளிகளை பாஜக தொடர்ந்து காப்பாற்றிவருகிறது. தமிழக மக்கள் பாஜகவிடம் எச்சரிக்கையொடு இருக்கவேண்டும்.

"உலகில் யாரும் செய்யாததையா சதானந்த கவுடா செய்துவிட்டார் "என்று எந்த நேரமும் பாஜகவின் பி டீமான சீமான் களத்தில் குதித்து பாஜகவை காப்பாற்றி கரை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. நாம் தான் குறிப்பாக பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’’எனக் கூறியுள்ளார். 

click me!