சீனாவில் கொரோனா தொற்றுக்கு பயந்து ரூபாய் நோட்டுக்களை எரிக்க வங்கிகள் உத்தரவு!!

By Thiraviaraj RMFirst Published Feb 19, 2020, 11:37 PM IST
Highlights

சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை தீயில் கொளுத்த  அந்நாட்டு மத்திய வங்கி முடிவு 

T.Balamurukan

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான வுகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி , மலேசியா,சிங்கப்பூர்,அமெரிக்கா, பிரிட்டன்,இந்தியா போன்ற உலகம் நாடுகளை கடுமையாக மிரட்டி வருகிறது.  

இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.  தற்போது வரை கொரானோ வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.


 சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை தீயில் கொளுத்த  அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நோட்டுகளை, 14 நாட்களில், அதிக வெப்பத்தில் வைத்து தீ வைத்து கொளுத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!