காவி நிறத்துக்கு மாறிய எம்.ஜி.ஆர். சிலை... தி.மலையில் வழக்கத்துக்கு மாறான எம்.ஜி.ஆர். சிலை!

By Asianet TamilFirst Published Feb 19, 2020, 10:36 PM IST
Highlights

எம்.ஜி.ஆர். சிலையை எப்போது வெண்கலத்தில் அமைப்பது வழக்கம். வெண்கலம் அல்லாமல் காங்கிரீட் வடிவில் அமைக்கும்போது வெள்ளை சட்டை, வேட்டி. தொப்பி சகிதம் சிலையை வடிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலி குப்பம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை வழக்கத்துக்கு மாறாக காவி நிறத்தில் உள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். சிலையை காவி நிறத்தில் அமைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். சிலையை எப்போது வெண்கலத்தில் அமைப்பது வழக்கம். வெண்கலம் அல்லாமல் காங்கிரீட் வடிவில் அமைக்கும்போது வெள்ளை சட்டை, வேட்டி. தொப்பி சகிதம் சிலையை வடிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலி குப்பம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை வழக்கத்துக்கு மாறாக காவி நிறத்தில் உள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
திருவள்ளுவரை அடுத்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு காவி நிற சட்டை அணிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலை காவி நிறத்தில் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அண்மையில்  தமிழக பாஜக தெய்வப் புலவர் திருவள்ளுவர் படத்தை காவி நிறத்தில் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலை காவி நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!