அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவேன்.!!பாராளுமன்றத்தில் முழங்கிய பிரதமர்.!தொடங்கியது கமிட்டி.!!

By Thiraviaraj RMFirst Published Feb 19, 2020, 9:54 PM IST
Highlights

பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவுக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் சேர்மனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

T.Balamurukan

பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவுக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் சேர்மனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் தீர்ப்பு வழங்கியது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும், இதற்கு பதிலாக 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.பிரதமர் மோடியின் முன்னாள் உதவியாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவுக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் சேர்மன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயிலை கட்டும் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ஜென்ப பூமி நியாஸின் நிருதிய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விஷ்வ இந்து பரிஷ்த் அமைப்பின் முக்கிய தலைவரான சம்பக் ராய்க்கு, ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 இந்த கமிட்டியில் இடம்பெற்றிருப்பவர்களின் பெயர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி 5-ம்தேதியன்று 15 நபர்களை கொண்ட ராமர் கோயிலை கட்டும் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதன்படி மொத்தம் 9 நபர்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மற்ற பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இதில் ராமர் கோயிலை கட்டும் பணியை தொடங்கும் நாள் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

click me!