அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் கட்சி பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் கட்சி பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் தொடர்ந்து கூறிவருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க;- நாடாளுமன்ற தேர்தலில் இந்த சின்னத்தில்தான் போட்டி.. இந்தியா கூட்டணி ஆண்டிகள் கூடி கட்டிய மடம்.. ஓபிஎஸ் சரவெடி!
இந்த வழக்கில் ஒபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தொடர்ந்து 3வது முறையாக அவகாசம் கேட்டதால் கடுப்பான நீதிபதி சதீஷ்குமார் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒபிஎஸ்-க்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனி நீதிபதியின் இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்கம் செல்லும் என்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த இபிஎஸ் தரப்பு தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்சி சின்னம் கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தியதால் வழக்கு தொடரப்பட்டது என வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த மேல் முறையீட்டு வழக்கில் காட்டிய ஆர்வத்தை தனி நீதிபதியிடம் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டி இருந்தால் தடை விதிக்கப்இதையும் படிங்க;- இதையும் படிங்க;- படாமல் இருந்திருக்கும் என வாதிடப்பட்டது.
இதையும் படிங்க;- கடவுளே.. நல்ல உடல்நலத்துடன் சீக்கிரம் வெளிய வரணும்.. பழைய நண்பருக்காக வருத்தப்பட்ட டிடிவி. தினகரன்!
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பு செல்லும் என்றும், ஓபிஎஸ் தரப்பு தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.