தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இச்சம்பவம் அறிந்த உடனே, கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர்கள் கே. ராஜேந்திரன், உள்ளிட்டோர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதலை தெரிவித்தனர். வறுமையின் பிடியில் மாட்டிக் கொண்ட பெரும்பாலான கிராமப்புற மக்கள் வேறு வழியில்லாமல் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் இவர்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை. ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் அனைத்து வெடிபொருட்களுக்கான மூலப்பொருளை கண்காணிக்கவும், உற்பத்திக்கு தகுந்தவாறு தொழில் செய்வதற்கான இடங்கள், தொழிலாளர்கள் பணியமர்த்தல் மற்றும் உரிய பாதுகாப்பு போன்ற அம்சங்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கையாக போச்சு.. கொதிக்கும் டிடிவி. தினகரன்..!
ஆனால் அரசு அதிகாரிகள் இப்பணிகளை முறையாக மேற்கொள்ளாமலும், பட்டாசு உரிமையாளர்களுக்கு ஆதரவாக கண்டும், காணாமலும் இருப்பதே இதுபோன்ற விபத்துகள் தமிழகத்தில் தொடர்வதற்கும், மனித உயிர்கள் மடிவதற்கும் முக்கிய காரணமாகும். இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டுப்பட்டும் கறாரான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததன் விளைவே இதுபோன்ற விபத்துகள் தொடர்கின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, தமிழகத்தில் பட்டாசு விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும்,
தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ. 5 லட்சம் அறிவித்துள்ளார். இருப்பினும் இழப்பீட்டு தொகையை கூடுதலாக்கி ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கையாக போச்சு.. கொதிக்கும் டிடிவி. தினகரன்..!