அசிங்க அசிங்கமான பேச்சு.. போற இடமெல்லாம் பிரச்சனை.. ரெம்ப மோசமானவர் இந்த சூர்யா சிவா.. Ex டிரைவர் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2022, 6:34 PM IST
Highlights

பெற்ற தாயை கூட மதிக்காதவர் தான் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா என்றும், தன் தாய் எதிரிலேயே சிகரெட்  புகைத்தவர்தான் சூர்யா என அவரது முன்னாள் கார் ஓட்டுனர் முன்னா தெரிவித்துள்ளார்.

பெற்ற தாயை கூட மதிக்காதவர் தான் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா என்றும், தன் தாய் எதிரிலேயே சிகரெட்  புகைத்தவர்தான் சூர்யா என அவரது முன்னாள் கார் ஓட்டுனர் முன்னா தெரிவித்துள்ளார். சூர்யா சிவா திமுகவில் இருந்து விலகிய பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில் கார் ஓட்டுநர் இவ்வாறு விமர்சித்துள்ளார.

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் திருச்சி சிவா. கட்சியில் அவருக்கு என தனி செல்வாக்கு உண்டு. கொள்கைப் பிடிப்பு உள்ளவர், சிறந்த நாடாளுமன்றவாதி என்பதை தனது அடையாளமாகக் கொண்டுள்ளார் சிவா. இந்நிலையில் அவரது மகன் சூர்யா பாஜகவில் இணைந்துள்ளார்.

அதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கட்சிக்கு உழைத்த தனக்கு அங்கீகாரம் இல்லாததால் கட்சியை விட்டு விலகியதாகவும், திமுகவில் முக்கோண அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது என்றும், தனது தந்தைக்கும் தனக்கும் உறவு சரியில்லாததால் தனது தந்தையின் சார்பிலும் தனக்கு உதவி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில் சூர்யாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி சிவாவின் முன்னாள் கார் ஓட்டுனர் முன்னா என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சூர்யா சிவா குறித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சூர்யா சிவா குறித்து அவர் கூறியுள்ளார்.

அவரின் இந்த குற்றச்சாட்டுகள் சூர்யா இப்படிப்பட்டவரா என்று கேட்க வைப்பதாக உள்ளது. அவர் குறித்து ஓட்டுநர் முன்னா கூறியதாவது:- பெற்ற தாயை கூட மதிக்காதவர் தான் சூர்யா சிவா, அவரது அம்மா காரின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பார் சூர்யா பின் இருக்கையில் அமர்ந்து தம்மடித்து வருவார். இதுவே அவர் யார் என்பதற்கு உதாரணம். யாரையும் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசக்கூடியவர். அவரை விட மூத்தவளாக இருந்தாலும் கூட அவர்களை வாடா போடா என்று தான் கூப்பிடுவார். 15 ஆண்டுகாலமாக நான் திருச்சி சிவாவின் ஓட்டுநராக இருந்தேன். நான் வேலையை விடுவதற்கு காரணமே இந்த சூர்யாதான், யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டார். ஆனால் திருச்சி சிவா அவர்கள் என்னை வேலையை விட வேண்டாம் என வலியுறுத்தினார். ஆனால் மரியாதை இல்லாததால் நான்  வேலையிலிருந்து விலகி விட்டேன்.

திருச்சி சிவா மீது தந்தை என்றும் பாராமல் சூர்யா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார், சிவா காதல் திருமணத்துக்கு எதிரானவர் என்பது போல பேசுகிறார், காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டிருந்தால் அவர் எதிர்த்திருக்க மாட்டார், காதலித்த பெண்ணை கைவிட்டு விட்டு திடீரென வேறு ஒரு பெண்ணை சூர்யா திருமணம் செய்துகொண்டார். அதனால்தான் சிவா அதை எதிர்த்தார், கண்டித்தார். சிவா ஒன்றும் காதலுக்கு எதிரானவர் அல்ல, காதலித்த பெண்ணை ஏன் கைவிட்டாய் என்றுதான் கேட்டார். ஆனால் அதை வைத்துக்கொண்டு திருச்சி சிவா ஒரு சாதி வெறியர் போன்று சூர்யா சித்தரித்து பேசிவருகிறார். கட்சியில் முக்கோண அரசியல் நடக்கிறது என கூறியிருப்பது சுத்தப் பொய், அதேபோல் கட்சிக்கு உழைத்ததாக சொல்லுகிறார் அதிகபட்சமாக இவர் கட்சிக்காக என்ன செய்திருக்கிறார் போஸ்டர் ஒட்டியதாக கூறுகிறார், அதைத் தாண்டி என்ன செய்தார்.

போஸ்டர் ஒட்டுவது தாண்டி இவருக்கு எந்த தகுதியும் இல்லை, ஒரு வட்டச் செயலாளர் ஆவதற்கு கூட தகுதியற்றவர்கள் இந்த சூர்யா, ஆனால் அவரது தந்தை திருச்சி சிவா அப்படி அல்ல கொள்கைவாதி, சிறந்த நாடாளுமன்றவாதி, சூர்யா செல்லும் இடத்திலெல்லாம் வம்பி இழுப்பார், யாயாவது இவரை பார்த்தாலு கூட  என்ன முறைக்கிறாய் என அவர்களை அடித்து விடுவார், சிவா வாங்கிய புதிய காரை மது போதையில் ஓட்டிச் சென்று ஒரு வீட்டில் மோதி விபத்து ஏற்படுத்தினார், இப்படி ஒவ்வொரு நாளும் பிரச்சனை அடிதடி மோதல்,  இப்படி பல பிரச்சினைகளிலிருந்து அவரை கட்சியினர் காப்பாற்றினர். பலமுறை தனது மகனுக்கு திருச்சி சிவா எவ்வளவோ அறிவுரை கூறியிருக்கிறார், ஆனால் அந்த அறிவுரை எதையுமே சூர்யா கேட்டதில்லை. அதனால் தான் தனது மகனாக இருந்தாலும் திருச்சி சிவா ஒதுக்கி வைத்திருக்கிறார்.

திருச்சி சிவா கொள்கைவாதி, நேர்மையானவர், ஆனால் அதில் எந்த தகுதியும் இந்த சூர்யாவுக்கு கிடையாது. பார்த்து பார்த்து வளர்த்த தந்தை மீது இப்படி அபாண்டமாக பொய் கூறுகிறார் சூர்யா. எப்போதும் கலவர நோக்கத்துடனே இருப்பவர்தான் சூர்யா, இவருக்கு பாஜக சரியான கட்சிதான். இவர் அக்கட்சிக்கு சென்றது திமுகவுக்கு நல்லதுதான். இவ்வாறு முன்னாள் கூறியுள்ளார். 

 

click me!