சிங்கள பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழகமே.. முதல்வர் ஸ்டாலின் அவர்களே நன்றி.. சிங்கள நாளேடு நெகிழ்ச்சி.

Published : May 14, 2022, 05:29 PM IST
சிங்கள பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழகமே.. முதல்வர் ஸ்டாலின் அவர்களே நன்றி.. சிங்கள நாளேடு நெகிழ்ச்சி.

சுருக்கம்

சிங்களர் பசி கண்டு மனிதநேயத்துடன் உதவும் தமிழகமே.. முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு நன்றி என சிங்கள நாளேடு மௌபிம நெகிழ்ந்து பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளது.    

சிங்களர் பசி கண்டு மனிதநேயத்துடன் உதவும் தமிழகமே.. முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு நன்றி என சிங்கள நாளேடு மௌபிம நெகிழ்ந்து பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, முழுக்க முழுக்க இந்திய அரசு இலங்கைக்கு நிதி மற்றும் உணவு பொருட்கள் என ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசும்  சுமார் 170 கோடி ரூபாய் அளவிற்கு 40000 டன் அரிசி மற்றும் மருந்து பொருட்கள் குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள் போன்றவற்றை அனுப்பி வைக்க உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டதுடன் அதன்படி உதவிப் பொருட்கள் ஒருசில தினங்களில் இலங்கை சென்று சேர உள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் இந்த உதவியை பாராட்டி  சிங்களர் நாளேடு மௌபிம கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  கொடுப்பதில் பகிர்வதில் பிறவி பழக்கம் சிங்களவர்களுக்கு உண்டு, இதை  சிங்களவர்கள் பெருமையாக கருதுவதும் உண்டு. பகிர்வதோ கொடுப்பதோ இல்லை என்றால் தானம் இல்லை.

வேதனை எங்கு நடந்தாலும் அது அனைத்து மனித சமூகத்தையும் இணைக்கும் பாலமாக அமைகிறது. எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மனிதநேயத்தை  கட்டமைக்கும் சேவையை இன்று தமிழ்நாட்டில் பார்க்கிறோம். இலங்கையில் இன்னல்களை அறிந்தவுடன் தமிழர் சிங்களவர் என்ற பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் உதவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் மனிதநேயத்தை உயிர்ப்பிக்கும் சேவையை பார்க்கிறோம். மனித இனத்தை உயர்த்தும் கதையாக இது மாறியுள்ளது. இந்த நிகழ்வை இனி யாராலும் மறக்க முடியாது. சிங்களர் பசி கண்டு மனிதநேயத்துடன் உதவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாட்டு சகோதரர்களுக்கும் நன்றி.. இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மனித நேயத்தை கட்டமைக்கும் பாலமாக நிவாரண உதவிகள் அமைந்துள்ளன. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடமிருந்தும் ஒட்டுமொத்த இந்திய தலைவர்களிடம் இருந்தும் இலங்கையில் வாழும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இருந்தும் மற்றும் தமிழ் அமைப்புகளிடம் இருந்தும் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமிருந்தும் இந்த மனிதநேயத்தை பார்க்கிறோம்.

ஒட்டுமொத்த மனித இனத்தை உயர்த்தும் கதையாக இக்கதையை எழுத வடிவம் செய்தவர்களை மறக்க முடியாது. இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு இலங்கை தமிழர்களை தங்கள் சொந்த மக்களாகவே பாவிக்கிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை களைய தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் அனுப்ப முடிவு செய்தது. ஆனால் தமிழக மக்களுக்கு மட்டும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும் என்ற தனது எண்ணத்தை முதல்வர் ஸ்டாலின் திடீரென மாற்றிக் கொண்டார். தமிழக மக்களுக்கு மட்டும் உதவிகள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டதுடன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் சிங்களவர்கள் என பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் தனது ஆதரவை வழங்கி உணர்வுப்பூர்வமாக உதவி செய்ய முன்வந்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின். 

3.6 பில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான 40 ஆயிரம் டன் அரிசி, 1.3 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் உயிர்காக்கும் மருந்துகள். குழந்தைகளுக்கான 685 மில்லியன் ரூபாய் பெரும் மதிப்பிலான 500 டன் பால், இலங்கையில் வாழும் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்குவதற்காக முடிவு செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், இதுதொடர்பாக மத்திய அரசை சந்தித்தார், பிரதமர் மோடியை சந்தித்தார், இலங்கைக்கு இந்த உதவிகள் வழங்க அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தன. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தின் சார்பாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதேபோல் தமிழர்களுக்கு மட்டும் உதவிகளை அனுப்ப வேண்டாம் என  இலங்கையில் உள்ள பல்வேறு தமிழ் தலைவர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே மத்திய அரசு அனுப்பியுள்ள நிவாரண உதவிகளுடன் இந்த நிவாரண உதவிகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொருளாதார நெருக்கடியில், போராட்டக் களத்தில் இலங்கை மக்கள் மொழி, இன, மத, பேதங்கள் அனைத்தையும் கடந்து சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்துள்ளனர். இந்த சகோதர பந்தம் தமிழ்நாடு உதவி என்பது தமிழர்களாகிய எங்களுக்கு மட்டும் அல்ல என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாட்டில் இன பிளவை தொடர்ந்து செய்து கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இலங்கையில் நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள சகோதர பிணைப்பு வலுப்பெற்றுள்ளது என்பது இதன் மூலம் புலனாகிறது. ஒவ்வொரு கரு நிற மேகத்திலும் உள்ள வெள்ளை கோடு போல இதுவும் ஒரு நல்ல சகுணம். இவ்வாறு அந்த நாளிதழில்  எழுதியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!