இந்தி தெரிந்த திமுக அமைச்சர்கள் பானிபூரி விற்பார்களா..? இது ஒரு வெட்கக்கேடு.. பதிலடி கொடுத்த குஷ்பு...

By Thanalakshmi VFirst Published May 14, 2022, 5:56 PM IST
Highlights

இந்தி தெரிந்தவர்கள் பானிபூரி தான் விற்கிறார்கள் எனும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் கருத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு பதிலடிக் கொடுத்துள்ளார். இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், அவர்களது குடும்பத்தினர் பானிபூரி விற்க போகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். 
 

இந்தி தெரிந்தவர்கள் பானிபூரி தான் விற்கிறார்கள் எனும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் கருத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு பதிலடிக் கொடுத்துள்ளார். இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், அவர்களது குடும்பத்தினர் பானிபூரி விற்க போகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். 

சமீபத்தில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்று மொழியாக ஏற்று கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.  மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்திற்கு தமிழகத்தை சார்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மக்கள் மீது இந்தியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது பிராந்திய மொழிகளை பலவீனப்படுத்தும் முயற்சி என்றும் அவர்கள் சாடினர். 

மேலும் படிக்க: மத்திய அரசு மொழிதிணிப்பு செய்யவில்லை.. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கியம்.. ஆளுநர் ரவி பேச்சு.

இந்நிலையில் தான் நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி முன்பே இந்தி குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, இது பெரியார் மண் என்றும் இங்கு இருமொழிக் கொள்கை தான் எப்பொழுதும் இருக்கும் என்றும் கூறினார். அதோடுமட்டுமல்லாமல், மாணவர்கள் தாங்கள் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் குறிப்பிட்ட மொழியை தான் படிக்க வேண்டும் என்று திணிக்கக் கூடாது என்று பேசினார். 

தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநருக்குத் தெரியப்படுத்தவே இதைக் கூறுகிறேன் என்று பேசிய அவர், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பலர் சொல்கிறார்கள். கோவையில் பானிப்பூரி கடை நடத்துபவர்கள் யார் என்று கேள்வியெழுப்பினார். நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்றுதான் கூறுகிறோம் என்று விளக்கமளித்தார். இந்தி பேசுபவர்கள் பானிப்பூரிதான் விற்க முடியும் என்கிற வகையில் அமைச்சர் கருத்திற்கு தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு தனது எதிர்ப்பை தெரிவித்துள்லார்.

So very soon we shall see all hindi speaking ministers, MPs n their hindi educated family members selling pan puris.
What a shame to see an education minister speak such a language. What else can we expect from such people? Want to know if endorses this.

— KhushbuSundar (@khushsundar)
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,”இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், இந்தி பேசும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் விரைவில் பானிப்பூரி விற்க போகிறார்கள். அதை நாம் பார்க்க போகிறோம். இப்படி ஒரு வார்த்தையை அதுவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியது வெட்கக் கேடு. இது போன்றவர்களிடம் நாம் இவற்றை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறாரா என தெரியவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: minister Ponmudi about Hindi: இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள்... ஒரே போடாக போட்ட அமைச்சர் பொன்முடி!!

click me!