தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் இன்று புகார் மனுக்களை பெறுகிறார். அதிரடிமேல் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2021, 9:43 AM IST
Highlights

பொதுமக்களுக்கு மேலும் நம்பிக்கை அளிக்கும் வகையில், இன்று காலை 10மணியளவில், சென்னை தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், முதலமைச்சரே நேரில் வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறியவுள்ளார்

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதல் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்கிறார். தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார்களாக அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த தனிப்பிரிவில் cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கலாம் என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புகார் அளிக்க ஏதுவாக இணையதளம் செயல்படுத்தப்பட்டும் வருகிறது.மேலும், புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அந்த இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் நேரடியாக முதலமைச்சரின் தனிபிரிவில் மனு அளித்து வருவதோடு, அளிக்கப்படும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு மேலும் நம்பிக்கை அளிக்கும் வகையில், இன்று காலை 10மணியளவில், சென்னை தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், முதலமைச்சரே நேரில் வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!