கொங்குநாடு என்பது ஒரு கற்பனை..தமிழர்கள் பிரிவினை வாதங்களை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.. போட்டுத்தாக்கிய அழகிரி

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2021, 9:28 AM IST
Highlights

இதுபோன்ற பிரிவினை வாதங்களை ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்த அவர், பாஜகவின் இம்மாதிரியான பிரித்தாளும் சூழ்ச்சிகளை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது 

கொங்குநாடு என்பது ஒரு கற்பனை நாடு மட்டுமே என்றும், தமிழக மக்கள் இது போன்ற எந்த எந்த ஒரு விஷயத்தையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், தமிழக காங்கிரஸின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் கேரள ஆளுநருமான பேராசிரியர் பா. ராமசந்திரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் பா.ராமச்சந்திரனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

மேலும் நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் பொன். கிருஷ்ணமூர்த்தி ,முருகானந்தன், ஆர்.தாமோதரன் மற்றும் கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ் அழகிரி, தமிழக காங்கிரஸ் வரலாற்றில் மிக சிறப்பான இடத்தைப் பெற்றவர் பா.ரா என்றும் ,மேலும் பாரா அரசியல் தலைவராக  மட்டுமில்லாமல் ஒரு போராளியாகவும் இருந்து வந்தார் என கூறினார்.

மேலும், தேசியத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு தோழர். பாராவின் புகழ் ஓங்க வேண்டும் என்றும் மற்றும் பா.ராவை போல் 100 பாராகள் உருவாக வேண்டும் என்று கூறினார். மேலும் கொங்கு மண்டலத்தை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றப்போவதாக கூறப்படுகிறதே என் செய்தியாளர்கள் எழுப்பிய கோள்விக்கு பதிலளித்த அவர், தமிழர்கள் ஒற்றுமையை தான் என்றும் விரும்புவார்கள், இதுபோன்ற பிரிவினை வாதங்களை ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்த அவர், பாஜகவின் இம்மாதிரியான பிரித்தாளும் சூழ்ச்சிகளை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்றும், தமிழகத்தின் வெற்றியே அது பரந்துபட்ட தமிழகமாக இருப்பதில்தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

click me!