முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்து விவாதம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2021, 8:55 AM IST
Highlights

எனவே அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேமதாது அணை பிரச்சனை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். 

மேகதாது அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, பா.ஜ.க,  ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக,  மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். கர்நாடகவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறையும் எனவும் கவலை அதிகரித்துள்ளது, எனவே அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதனையடுத்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேமதாது அணை பிரச்சனை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தமிழக அரசிடம் தெரிவிக்காமல் கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைப்பெறுகிறது. 

இந்த கூட்டத்தில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுக்க வேண்டிய சட்டரீதியான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பெரும்பாலான கட்சிகள், மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதுத்தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

click me!