3வது அலை குழந்தைகளை தாக்கும்.. வேகவேகமாக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிகிச்சைக்கான ஏற்பாடு.

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2021, 9:13 AM IST
Highlights

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியம், 3-வது அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் இருக்கிறது. எல்லா அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் வெளியீடப்பட்டது. மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ் மற்றும் பரிசளித்தார். 

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியம், 3-வது அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் இருக்கிறது.எல்லா அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் முழுமையாக பேரிடர் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். விரும்பிய நாளில் குழந்தையை பெற்று எடுப்பது தற்போது அதிகமாகி வருகிறது. 10 மாதம் முழுமை அடைந்தாள் முழு திறனுள்ள குழந்தையாக பிறக்கிறது. இயற்கைக்கு மாறாக குழந்தையை பெற்று எடுப்பது படிப்படியாக குறைக்கப்படும். 60% இயற்கையாக குறிக்கப்பட்ட தேதியில் பிறக்கிறது. இதை 80% மாற்ற தமிழக அரசு செயல்படும் என அவர் கூறினார். இயற்கைக்கு எதிரான விஷயம் தனியார் மருத்துவமனையில் பணத்திற்காக இது மாதிரியான செயல்பாடு அதிகமாக நடைப்பெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு யோக, மூச்சு பயிற்சி ஆகியவற்றை  வழங்க அரசாங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மருத்துவமனைகளின்  கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த அவர் மேலும், மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு வருகிறோம், இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார். இரண்டு நாள் கழித்து ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி ஏற்றவுடன் கலந்து பேசி மாணவர் சேர்க்கை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பேணிக்காக்கப்படும் என அவர் உறுதிபட தெரிவித்தார். 

 

click me!