தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல்... மே 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை...!

By vinoth kumarFirst Published Feb 26, 2021, 5:44 PM IST
Highlights

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார். 

மே 24ம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் 12ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச் 19ம் தேதி கடைசி நாளாகும்.  மார்ச் 20ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.  வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.  தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்வு முடிவுகள் மே 2ம் தேதி வெளியாக உள்ளது.  

click me!