அன்வர் ராஜாவுக்கு பிறகு விழ போகும் அடுத்த விக்கெட்..? யாரெல்லாம் கருத்து சொல்றாங்க பாருங்க…

By manimegalai aFirst Published Dec 1, 2021, 8:29 PM IST
Highlights

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா போன்று மேலும் பலர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று கட்சியில் இருந்து என்றோ நீக்கப்பட்ட பலரும் கருத்து கூறி வருவது ர.ர.க்களை கடுப்பில் கொண்டுபோய் விட்டிருக்கிறது.

 

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா போன்று மேலும் பலர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று கட்சியில் இருந்து என்றோ நீக்கப்பட்ட பலரும் கருத்து கூறி வருவது ர.ர.க்களை கடுப்பில் கொண்டுபோய் விட்டிருக்கிறது.

அதிமுகவில் இருந்து எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர், முன்னாள் அமைச்சர், எம்பி பல பதவிகளை அலங்கரித்த அன்வர் ராஜாவின் நீக்கம் அக்கட்சிக்குள் மட்டும் அல்ல… அதிமுக சார்பு மனோநிலையில் உள்ளவர்களையும் உலுக்கி இருக்கிறது.

சசிகலாவுக்கு ஆதரவு, இபிஎஸ், ஓபிஎஸ் எதிராக தொடர் பேட்டிகள், கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று அடுத்தடுத்து கூறிய கருத்துகள் பற்றி அதிமுகவில் 2 வாரங்களுக்கும் மேலாக பேச்சுகள் ஓடி உள்ளன. உச்சக்கட்டமாக இபிஎஸ்சை மரியாதையின்றி ஒருமையில் விளித்தார், அதற்கு பதிலடியாக சிவி சண்முகம் கொந்தளித்தார் என்று போகிற போக்கில் பல செய்திகள் இருந்தாலும் அவர் இப்போது அதிமுகவில் இல்லை.

எந்த கட்சிக்கு அடுத்த அன்வர் ராஜா இடம்பெறுவார் என்று தெரியாத நிலை உள்ளது. வழக்கமாக அதிமுகவில் பகலில் அறிவிக்கப்படும் கட்சி நீக்க அறிவிப்பு இம்முறை நள்ளிரவு அரங்கேறி இருக்கிறது. அன்வர் ராஜாவின் டிஸ்மிஸ் கட்சியில் பல அதிர்வலைகளை உருவாக்கி இருந்தாலும் சசிகலாவுக்கு எதிராக எந்த ஆதரவு குரலும் எழுந்துவிடக்கூடாது என்ற மைய புள்ளியை சுற்றி வரையப்பட்ட கோலம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இந்த விஷயத்தில் தமது பிடிமானத்தை ஓபிஎஸ் விட்டுவிட்டு, அன்வர் ராஜாவின் நீக்கத்துக்கு சம்மதித்து இருக்கிறார் என்றும் தகவல்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. அன்வர் ராஜா நீக்கம் மூலம் சசிகலா ஆதரவு வாய்களை அடைத்துவிட்டார் எடப்பாடி என்றும் பேசப்படுகின்றன.

ஆனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவரத்தை அறிந்து கட்சியில் ஏற்கனவே கட்டம் கட்டப்பட்டவர்கள் அதிமுகவை விமர்சிப்பதை கண்டு தான் ரத்தத்தின் ரத்தங்கள் கொதித்து போயிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அன்வர் ராஜாவுக்கு அடுத்த யார் விக்கெட் விழப்போகிறது என்ற அளவுக்கு டுவிட்டரில் அஸ்பயர் சுவாமிநாதன் பதிவிட்டுள்ளது கண்டு கோபத்தில் உள்ளனர்.

அவர் தமது பதிவில் கூறி இருப்பதாவது: பேசியே வளர்ந்த கட்சியாம்.. கூட்டங்களில் பேச தடை. டிவியில் பேச தடை உள்அரங்குகளில் விவாதிக்க தடை, அடிக்க, உதைக்க பாய்வார்கள்.

தனக்கு கிடைத்துள்ள “அந்த டெல்லி தகவல்களை”செயற்குழுவில் பேசி, நெருக்கடியை ஏற்படுத்தி விட்டால்?அதற்கு தான் அன்வர் பாய் நீக்கமோ? அடுத்த wicket யாருனு தெரியுமா? என்று பதிவை போட்டு தெறிக்க விட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு தான் இப்போது அதிமுகவில் பேசு பொருளாகவும், விவாதமாகவும் மாறி இருக்கிறது.

கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் எல்லாம் கருத்து கந்தசாமிகளாக மாறிவிட்டனர் என்ற அளவில் கட்சி இப்போது இருக்கிறது. இதுவே ஜெயலலிதா கால அதிமுகவாக என்றால் இப்படி நடக்குமா? கருத்து சொல்லும் நபர்களின் நடவடிக்கைகளை பாருங்கள் என்ற கோபக்குரல்கள் எழ ஆரம்பித்து உள்ளன.

அன்வர் ராஜாவுக்கு அடுத்து விழ போகும் விக்கெட் என்று கூறும் அஸ்பயர் சுவாமிநாதன், அதிமுக தகவல் தொடர்பு பிரிவு செயலாளராக இருந்து பின்னர் கட்டம் கட்டப்பட்டவர். கட்சியில் இப்போது எந்த பொறுப்பிலும் இல்லாதவர் என்று நன்றாகவே தெரியும்.

இல்லாதவர்கள் வாயில் அதிமுக விழும் அளவுக்கு நிலைமை இருக்கிறது என்ற ர.ரக்கள் பொருமுகின்றனர். கட்சியினுள் நடக்கும் அனைத்து மேல்மட்ட நடவடிக்கைகள், பேச்சுகள் போன்ற விவகாரங்கள் கட்சியில் இருந்து கட்டப்பட்ட இவர் போன்றவர்களுக்கு எப்படி தெரியும்? ராணுவ கட்டுப்பாடு எங்கே என்று கேள்விகளையும் தொண்டர்கள் வேதனையுடன் எழுப்பி வருகின்றனர்.

click me!