
லட்சுமிபுரத்தில் உள்ள கிணற்றை பொறுத்தவரை எங்கள் மீது எந்த தவறும் இல்லை எனவும் உண்மை நிலை விரைவில் தெரிய வரும் எனவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில் ஒபிஎஸ்க்கு சொந்தமான ராட்சத கிணறு ஒன்று உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள ராட்சத கிணறு தான் எனவும், அது முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு சொந்தமானது எனவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஓபிஎஸ் தோட்டத்தை நோக்கி படையெடுத்து கிணற்றை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் மதுரை வந்த ஒபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, லட்சுமிபுரத்தில் உள்ள கிணற்றை பொறுத்தவரை எங்கள் மீது எந்த தவறும் இல்லை எனவும் உண்மை நிலை விரைவில் தெரிய வரும் எனவும் தெரிவித்தார்.